சச்சின் டெண்டுல்கரின் 24 ஆண்டுகால சாதனையை இன்றைய போட்டியில் முறியடிக்க காத்திருக்கும் – ரிஷப் பண்ட்

Pant
- Advertisement -

இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோர் தொடர்ச்சியாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருவதால் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக கே.எல் ராகுல் அறிவிக்கப்பட்டார். ஆனால் தென் ஆப்பிரிக்கா தொடர் தொடங்குவதற்கு முந்தைய தினம் அவரும் காயம் காரணமாக வெளியேறியதால் இந்திய அணியின் புதிய கேப்டனாக இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டார்.

INDvsRSA

- Advertisement -

அவரின் தலைமையில் முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணியானது இன்று கட்டாக் நகரில் இரண்டாவது போட்டியில் விளையாட இருக்கிறது. தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியில் 211 ரன்கள் குவித்தும் மோசமான பவுலிங் காரணமாக இந்திய அணி தோல்வியை சந்தித்து இருந்தது. இந்நிலையில் அதற்கு பதில் அளிக்கும் வகையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப இந்திய அணி காத்துக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் சச்சினின் 24 ஆண்டுகால மாபெரும் சாதனை ஒன்றினை முறியடிக்க பிரகாசமான வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.

pant 1

அந்தவகையில் ரிஷப் பண்ட் படைக்கப்போகும் சாதனை யாதெனில் : கடந்த 2017 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான ரிஷப் பண்ட் இதுவரை 30 டெஸ்ட் போட்டிகள், 24 ஒருநாள் போட்டிகள் மற்றும் 44 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இப்படி அவர் விளையாடியுள்ள 98 சர்வதேச போட்டிகளில் 99 சிக்சர்களை அவர் விளாசியுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் மேலும் ஒரு சிக்சரை அடிப்பதன் மூலம் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் 100 சிக்சர்களை பூர்த்தி செய்து விடுவார். இதன் மூலமாக அவர் சச்சினின் சாதனையையும் முறியடிக்கவுள்ளார். ஆம் இதே சாதனையை அதாவது சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா சார்பாக 100 சிக்சர்களை விரைவாக அடித்த வீரராக சச்சின் டெண்டுல்கர் திகழ்கிறார். சச்சின் தனது 25-வது வயதில் நூறு சிக்சர்களை அடித்து இருந்தார்.

இதையும் படிங்க : டெஸ்டிலும் அவர் சரிப்பட்டு வரமாட்டார், கேப்டன்ஷிப்ப மாற்றுங்க – முன்னாள் நியூசி வீரர் கோரிக்கை

ஆனால் தற்போது ரிஷப் பண்ட் அந்த சாதனையை இன்று ஒரு சிக்சர் அடிப்பதன் மூலம் 24 வயது 251 நாட்களில் இந்த சாதனையை படைக்க வாய்ப்பு உள்ளது. இந்த போட்டியில் அவர் சிக்ஸ் அடிக்காமல் ஆட்டம் இழந்தாலும் இன்னும் மீதம் மூன்று போட்டிகள் உள்ளதால் நிச்சயம் அவர் இந்த தொடரிலேயே சச்சினின் சாதனையை முறியடிக்க மிகப்பெரிய வாய்ப்பு பிரகாசமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement