டெஸ்ட் போட்டிகளில் வீரேந்திர சேவாக்கின் மாபெரும் சாதனையை தகர்த்து வரலாறு படைக்க காத்திருக்கும் – ரிஷப் பண்ட்

Pant and Sehwag
- Advertisement -

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது ஆட்டத்தில் பங்கேற்று விளையாடியிருந்த போது காயமடைந்தார். அதன்பின்னர் அந்த தொடரின் கடைசி போட்டியை தவறவிட்ட அவர் தற்போது காயத்திலிருந்து முழுவதுமாக வெளியேறி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் துணை கேப்டனாகவே இடம் பிடித்துள்ளார்.

சேவாக்கின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரிஷப் பண்ட் :

இந்நிலையில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நாளை நவம்பர் 14-ஆம் தேதி கொல்கத்தா மைதானத்தில் துவங்க இருக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாட இருக்கும் ரிஷப் பண்ட் இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக்கின் மாபெரும் சாதனை ஒன்றினை டெஸ்ட் போட்டிகளில் முறியடிக்க காத்திருக்கிறார்.

- Advertisement -

அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் அவர் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரராக முன்னாள் இந்திய அணியின் அதிரடி துவக்க ஆட்டக்காரரான வீரேந்திர சேவாக் முதல் இடத்தில் உள்ளார்.

சேவாக் இந்திய அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 90 சிக்ஸர்களை விளாசியுள்ளார். அதேவேளையில் இந்திய அணிக்காக 47 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாடியுள்ள ரிஷப் பண்ட் 90 சிக்ஸர்களை அடித்து அவருடன் சமநிலையில் உள்ளார். இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் மேலும் ஒரு சிக்சரை அவர் அடிக்கும் பட்சத்தில் இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்ஸர்களை விளாசிய இந்திய வீரர் என்ற மாபெரும் வரலாற்று சாதனையை நிகழ்த்துவார்.

- Advertisement -

ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் ரிஷப் பண்ட் இன்னும் பல ஆண்டுகாலம் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என்பதனால் ஏகப்பட்ட சாதனைகளை அவர் நிகழ்த்துவார் என்று நம்பலாம்.

இதையும் படிங்க : ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் டாப் 10-ல் இடம்பெற்றுள்ள 4 இந்திய வீரர்கள் – விவரம் இதோ

இங்கிலாந்து அணிக்கு எதிராக அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவர் காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரை தவறவிட்ட நிலையில் மீண்டும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடிருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement