சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவ்வப்போது நடைபெற்று முடியும் தொடர்களுக்கு மத்தியில் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளுக்குமான தரவரிசை பட்டியலையும் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் முடிந்த கையோடு ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் வெளியான பட்டியலில் இந்திய வீரர்கள் பலரும் இடம் பிடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டாப் 10-ல் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர்கள் :
ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். அவருக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் ஆப்கானிஸ்தானின் நட்சத்திர வீரரான இப்ராகிம் ஜாத்ரான் இருக்கிறார். மூன்றாவது இடத்தில் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரரான டேரல் மிட்சல் நீடிக்கிறார்.
நான்காவது இடத்தில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லும் இருக்கின்றார். அதேவேளையில் இந்த ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் இரண்டு இடங்கள் சறுக்கி ஏழாவது இடத்தை பிடித்துள்ளார். இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் அவர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியாலே இந்த சறுக்கல் ஏற்பட்டுள்ளது.
அதேபோன்று பாபர் அசாம் இரண்டு இடங்கள் பின்தங்கியதால் மீண்டும் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி டாப் 10-ல் ஐந்தாவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். அதேபோன்று இந்த டாப் 10-ல் மேலும் ஒரு இந்திய வீரராக ஷ்ரேயாஸ் ஐயர் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளார்.
இப்படி இந்திய வீரர்களான ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் என நான்கு வீரர்கள் டாப் 10-ல் இடம் பிடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. பந்துவீச்சாளர்கள் தரவரிசையை பொறுத்தவரை ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரரான ரஷித் கான் முதல் இடத்தில் நீடிக்கிறார். அவருக்கு அடுத்து இரண்டாவது இடத்தினை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் பிடித்துள்ளார்.
இதையும் படிங்க : சாய் சுதர்சனிடம் நல்ல திறமை இருக்கு.. அனால் அவர் இதை மட்டும் டெஸ்ட் போட்டிகளில் செய்யனும் – புஜாரா அட்வைஸ்
ஒருநாள் போட்டிகளுக்கான பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் மட்டும் டாப் 10-ல் ஆறாவது இடத்தை பிடித்திருக்கிறார். அதேபோன்று ஆல் ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலில் டாப் 10-ல் இந்திய வீரரான அக்சர் பட்டேல் மட்டும் எட்டாவது இடத்தை பிடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



