இந்திய அணியின் இளம் நட்சத்திர இடதுகை ஆட்டக்காரரான தமிழக வீரர் சாய் சுதர்சன் இந்த 2025-ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 2 அரைசதம் உட்பட 273 ரன்களை குவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர்ச்சியாக ரன் குவிக்கும் அவரது திறனை கருத்தில் கொண்டு இந்திய அணியின் நிர்வாகம் அவருக்கு டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பினை வழங்கியது.
சாய் சுதர்சன் இதை மட்டும் செய்தால் போதும் : புஜாரா அறிவுரை
அதோடு இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் மற்றும் பயிற்சியாளர் கம்பீர் ஆகியோரும் சாய் சுதர்சனின் திறமையின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளதால் தொடர்ச்சியாக அவரை இந்திய டெஸ்ட் அணியில் மூன்றாவது இடத்தில் களமிறக்கி வருகின்றனர். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுமாரான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி இருந்தாலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் அவர் மிகச் சிறப்பாகவே செயல்பட்டு இருந்தார்.
இதன் காரணமாக இனியும் அவர் மூன்றாவது இடத்தில் தொடர்வார் என்பது உறுதி. அந்த வகையில் இந்திய டெஸ்ட் அணியில் மூன்றாவது இடத்தினை பிடித்து விளையாடி வரும் சாய் சுதர்சன் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் தற்போது பங்கேற்று விளையாட இருக்கிறார்.
இளம் வீரரான அவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளதால் அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று பலரும் கூறிவரும் வேளையில் இந்திய டெஸ்ட் அணியில் மூன்றாம் இடத்தில் விளையாடி வந்த அனுபவ வீரரான சத்தீஸ்வர் புஜாரா சாய் சுதர்சனுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :
சாய் சுதர்சனக்கு எதிர்வரும் தென்னாப்பிரிக்க தொடர் மிக முக்கியமான ஒரு தொடர். ஏனெனில் இளம் வீரரான அவர் விரைவாக தனது ஆட்டத்தில் முதிர்ச்சியை கற்றுக்கொள்ள வேண்டும். இங்கிலாந்து தொடரில் அவர் சிறப்பாகவே செயல்பட்டு இருந்தார். அதேபோன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரிலும் அவர் சிறப்பாக செயல்பட்டிருந்தார்.
டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் திறன் அவரிடம் நிச்சயம் இருக்கின்றது. ஆனாலும் அவர் ஒரு விடயத்தை சரிசெய்து கொள்ள வேண்டும். அதாவது டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரை பெரிய இன்னிங்ஸ் விளையாட வேண்டியது அவசியம். அந்த வகையில் அவருக்கு கிடைக்கும் துவக்கத்தை எளிதில் விட்டுக் கொடுக்காமல் பெரிய ரன்களை நோக்கி நகர வேண்டும். இனிவரும் ஆட்டங்களில் அவர் எளிதாக விக்கெட்டை விட்டுக் கொடுக்கக் கூடாது.
இதையும் படிங்க : ரவீந்திர ஜடேஜா கிடையாது.. ராஜஸ்தான் அணியின் அடுத்த கேப்டன் இவர்தான் – ஆகாஷ் சோப்ரா கருத்து
அவர் மூன்றாம் விடயத்தில் விளையாடுவது அணிக்கும் நல்லது தான். ஏனெனில் டாப் ஆர்டரில் ஜெய்ஸ்வால் மற்றும் சாய் சுதர்சன் ஆகிய இடது கை ஆட்டக்காரர்கள் விளையாடும் போது எதிரணியின் பந்துவீச்சாளர்களுக்கும் லைன் மற்றும் லென்த்தை பிடிக்க கடினமாக இருக்கும். நான் விளையாடிய போது இடது கை ஆட்டக்காரர்கள் டாப் ஆர்டரில் இல்லை. ஆனால் தற்போது இந்திய அணியில் அவர்கள் இருப்பது நல்லது தான் என்று புஜாரா கூறியது குறிப்பிடத்தக்கது.



