எங்களது தொடர் வெற்றிக்கு இவர்கள் இருவரின் சிறப்பான ஆட்டமே காரணம் – டெல்லி கேப்டன் பண்ட் புகழாரம்

pant
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 29வது லீக் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ரிஷப் பண்ட் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி மயங்க் அகர்வாலின் சிறப்பான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களை குவித்தது.

agarwal

- Advertisement -

மயங்க் அகர்வால் ஆட்டமிழக்காமல் 99 ரன்கள் குவித்தார். டெல்லி சார்பாக சிறப்பாக பந்து வீசிய ரபாடா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்நிலையில் 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணி வழக்கம்போல் துவக்க வீரர்களின் சிறப்பான ஆட்டத்தினால் நல்ல துவக்கம் கண்டது ப்ரித்வி ஷா 39 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற ஒருபக்கம் ஷிகார் தவான் சிறப்பாக விளையாடினார்.

ஸ்மித் 24 ரன்களும், பண்ட் 14 ரன்களிலும் ஆட்டம் இருந்து வெளியேற இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த தவான் 69 ரன்களிலும், ஹெட்மயர் 16 ரன்களிலும் இருந்து டெல்லி அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தனர். டெல்லி அணி 17.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை குவித்தது.

hetmyer

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறுகையில் : ஷிகர் தவான் மற்றும் ப்ரித்வி ஷா இந்த போட்டியிலும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இரண்டாவது பாதியில் பந்து நின்று வந்தாலும் எங்களது துவக்கம் சரியாக இருந்ததால் எங்களால் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாட முடிந்தது. எங்கள் அணியில் அனைத்தும் தற்போது சரியாக சென்று கொண்டிருந்தாலும், இன்னும் சில குறைபாடுகளை நீக்க வேண்டியது அவசியம் உள்ளது.

இந்த போட்டி மிக அருமையாக இருந்தது. இந்த தொடர் முழுவதுமே எங்களது துவக்க வீரர்கள் சிறப்பாக விளையாடி வருவதால் நாங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறோம். எங்களது அணியில் இருக்கும் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிவேகமாக பந்துவீசி எதிரணியை கலங்கடிக்க கூடியவர்கள். டெல்லி அணிக்காக கேப்டன்சியை நான் ரசித்து செய்து வருகிறேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய விடயங்களை கற்று வருகிறேன். இவை அனைத்தும் எனக்கு உதவுகின்றன என பண்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement