அவரது வழியில் விளையாட அவருக்கு அனுமதி கொடுத்தால் இனிவரும் போட்டிகளில் அவர் அதிசயம் நிகழ்த்துவார் – பண்ட் புகழாரம்

pant
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 25வது போட்டி நேற்று இரவு அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்து வீச்சை தீர்மானம்செய்தார். அதன்படி முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரசல் 45 ரன்களையும், சுப்மன் கில் 43 ரன்கள் குவித்தனர்.

russell

- Advertisement -

அதன்பின்னர் 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி 16.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 156 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டெல்லி அணியின் துவக்க வீரர்களான ப்ரித்வி ஷா மற்றும் தவான் ஆகியோர் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ப்ரித்வி ஷா 82 ரன்களுடனும் ஷிகார் தவான் 46 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பிறகு பண்ட் 16 ரங்களில் ஆட்டமிழக்க ஸ்டாய்னிஸ் மற்றும் ஹெட்மயர் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர்.

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறுகையில் : பிரித்வி ஷா மிகவும் திறமையான வீரர் என்பது நாம் அறிந்ததுதான். ஆனால் அவருக்கு இன்னும் நம்பிக்கை கொடுத்தால் இது போன்ற அதிசயங்களை அவர் நிகழ்த்துவார். நாங்கள் அவரிடம் சொன்ன ஒரே ஒரு விடயம் யாதெனில் உங்களுடைய நார்மல் கேமை நீங்கள் விளையாடுங்கள் என்று கூறினோம்.

shaw 1

அந்த வகையில் இந்த போட்டியில் அவர் விளையாடிய விதம் எங்கள் அணிக்கு நல்ல ரன் ரேட்டை கொடுத்தது. இளம் வீரர்கள் தங்களது கிரிக்கெட்டை ஜாலியாக மகிழ்ச்சியாக விளையாட வேண்டும். லலித் இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டார். அவருக்கு பேட்டிங் வாய்ப்பு இந்த போட்டியில் கிடைக்கவில்லை என்றாலும் நிச்சயம் அவர் சிறப்பாக விளையாடுவார் என்ற நம்பிக்கை என்னிடம் இருக்கிறது.

shaw

கடந்த போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் நாங்கள் தோற்றம் எனவே இந்த போட்டியில் மீண்டும் வெற்றி பெற நினைத்தோம். இருப்பினும் எங்களது திட்டங்களில் எந்த மாற்றமும் செய்யவில்லை டெல்லி அணிக்கு கேப்டன்சி செய்வது மகிழ்ச்சியாக இருக்கிறது என பண்ட் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement