90 ரன்தான் டார்கெட்ன்னு தெரிஞ்சதும் நாங்க பண்ண முடிவு இதுதான்.. வெற்றி குறித்து பேசிய – குஜராத் கேப்டன் சுப்மன் கில்

Pant
- Advertisement -

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 32-வது லீக் போட்டியில் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியானது குஜராத் டைட்டன்ஸ் அணியை அதன் சொந்த மைதானத்தில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் ஹோம் கிரவுண்ட் அட்வான்டேஜ் உடன் விளையாடிய குஜராத் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்தது.

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய குஜராத் அணி டெல்லி அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 17.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 89 ரன்களை மட்டுமே குவித்தது.

- Advertisement -

பின்னர் 90 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியானது 8.5 ஓவர்களிலேயே நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 92 ரன்கள் குவித்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறுகையில் :

இந்த போட்டியில் நாங்கள் விளையாடிய விதம் உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த போட்டிக்கு முன்னதாக நாங்கள் ஒரு சரியான திட்டத்துடன் களமிறங்கினோம். அதற்கு ஏற்ப முடிவுகளும் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. குறிப்பாக பந்துவீச்சாளர்கள் இந்த போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருந்தனர்.

- Advertisement -

அணியில் உள்ள ஒவ்வொரு பவுலருமே தங்களது பங்களிப்பை உணர்ந்து மிகச் சிறப்பான செயல்பாட்டை இந்த போட்டியில் வெளிப்படுத்தியிருந்தனர். அதேபோன்று 90 ரன்கள் இலக்கு என்று தெரிந்த பின்னர் களமிறங்கும் போது எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக முடிக்க முடிவு செய்தோம். ஏனெனில் இந்த தொடரில் ஏற்கனவே ரன் ரேட் அடிப்படையில் சில பாயிண்ட்களை நாங்கள் இழந்துள்ளோம்.

இதையும் படிங்க : இப்படி 89 ரன்ஸ் மட்டுமே அடிச்சி இவ்ளோ கேவலமா தோக்க இதுதான் காரணம் – சுப்மன் கில் வருத்தம்

அதனை இந்த போட்டியின் மூலம் கவர் செய்துள்ளதாகவும் நினைக்கிறேன். அகமதாபாத் மைதானத்தில் விளையாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இனிவரும் போட்டிகளிலும் நாங்கள் இதே போன்ற வெற்றியை பெறுவோம் என ரிஷப் பண்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement