இவங்க 2 பேரை வச்சே மேட்சை சிம்பிளா ஜெயிச்சிட்டோம். வெற்றிக்கான காரணம் இவங்க தான் – புதுகேப்டன் பண்ட் மகிழ்ச்சி

Pant

ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டோனி தலைமையிலான சென்னை அணியும், பண்ட் தலைமையிலான டெல்லி அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்ய சென்னை அணி பேட்டிங் செய்தது. தொடக்கத்திலேயே அடுத்தடுத்து இரண்டு வீரர்களை 7 ரன்களில் இருந்த சென்னை அணி மொயின் அலி மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் அது ஆட்டத்தால் மீண்டும் சிறப்பான பாதைக்குத் திரும்பியது.

cskvsdc

பின்னர் ராயுடு, ஜடேஜா, சாம் கரன் என அனைவரும் கைகொடுக்க 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 188 ரன்கள் என்ற நல்ல ரன் குவிப்பை வழங்கியது. அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா 54 ரன்களையும், மொயின் அலி 36 ரன்களும் குவித்தனர். பின்னர் 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணி துவக்கத்திலிருந்தே அதிரடியாக விளையாடியது குறிப்பாக துவக்க வீரர்கள் தவான் மற்றும் ப்ரித்வி ஷா ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 138 ரன்கள் குவித்து சிறப்பான அடித்தளம் அமைத்தனர்.

அதன்பின்னர் ரிஷப் பண்ட் மற்றும் ஸ்டாய்னிஸ் ஆகியோர் எளிதாக அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இறுதியில் 18.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறியதாவது : எப்பொழுதும் ஒரு போட்டியை வெற்றியோடு முடிக்கும்போது மகிழ்ச்சியாகவே உணர்வோம்.

அந்த வகையில் இந்த போட்டியில் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. நான் இந்த போட்டியில் கொஞ்சம் பிரஷரோடுதான் இருந்தேன். மிடில் ஓவர்களில் ஆவேஷ் கான் மற்றும் டாம் கரன் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினர். டோனியுடன் டாஸ் போடுவதற்கு நடந்துவந்தது எனக்கு ஒரு ஸ்பெஷலான மொமன்ட் ஆக அமைந்தது. நான் கிரிக்கெட்டில் அவரிடமிருந்து நிறைய விஷயங்களை கற்று இருக்கிறேன்.

- Advertisement -

dhawan

இன்று இந்த போட்டியில் ரபாடா, நோர்க்கியா ஆகியோர் இல்லாமல் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை யோசித்து செயல்பட்டோம். அதன்படி எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். ஷிகர் தவான் மற்றும் பிரித்திவி ஷா ஆகியோர் பவர்ப்ளே ஓவர்களிலேயே எங்களுக்கு சிறப்பான துவக்கத்தை அளித்தனர். மேலும் இந்த போட்டியை எளிதில் வெற்றி பெற அவர்கள் இருவரின் பாட்னர்ஷிப் மற்றும் அதிரடி ஆட்டமுமே காரணம் என்று பண்ட் பெருமையாக கூறினார்.