- Advertisement -
ஐ.பி.எல்

எங்களிடம் இருந்து வெற்றியை பறித்து சென்றதே அந்த பையன் தான் – ரிஷப் பண்ட் வருத்தம்

நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நான்காவது லீக் போட்டியானது நேற்று விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெல்லி அணியானது மிகப்பெரிய இலக்கினை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் சேசிங் செய்து அபார வெற்றி பெற்றது.

நாங்கள் அடைந்த தோல்விக்கு அவரே காரணம் : ரிஷப் பண்ட்

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.அதனைத்தொடர்ந்து முதலில் விளையாடிய லக்னோ அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் என்கிற பிரமாண்ட ரன் குவிப்பை வழங்கியது. லக்னோ அணி சார்பாக பூரான் 75 ரன்களையும், மிட்சல் மார்ஷ் 72 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

அதனை தொடர்ந்து 210 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியானது துவக்கத்தில் இருந்தே அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க 6.4 ஓவர்களில் எல்லாம் 65 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்து கிட்டத்தட்ட தோல்வியை நோக்கி சென்று விட்டது. அதன் பிறகு ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், அஷுதோஷ் சர்மா மற்றும் விப்ராஜ் நிகம் ஆகியோரது அட்டகாசமான ஆட்டம் காரணமாக இறுதியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி எப்படியோ ஒரு வழியாக போராடி 19.3 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் குவித்து 1 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் போது டெல்லி அணி சார்பாக அதிகபட்சமாக அஷுதோஷ் சர்மா 66 ரன்களையும், விப்ராஜ் நிகம் 39 ரன்களையும், ஸ்டப்ஸ் 34 ரன்களையும் குவித்தனர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறுகையில் : எங்களது அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தும் இறுதியில் பெரிய ரன் குவிப்பை நோக்கி செல்ல முடியவில்லை.

- Advertisement -

ஆனாலும் நாங்கள் அடித்த இந்த ரன் வெற்றிக்கு போதுமானதாகவே நினைக்கிறேன். இருந்தாலும் இந்த போட்டியில் நாங்கள் செய்த தவறுகளால் தோல்வி நேர்ந்து விட்டது. அதிலிருந்து சில பாடங்களை கற்றுக் கொண்டுள்ளோம். குறிப்பாக அடிப்படையான விஷயங்களில் நாம் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் என்பது புரிந்தது. இந்த போட்டியில் நாங்கள் வெற்றியை கோட்டை விட்டதே அந்த இரண்டு பார்ட்னர்ஷிப் தான்.

இதையும் படிங்க : 2025 ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியில் கே.எல் ராகுல் விளையாடாதது ஏன்? – நற்செய்தியை வெளியிட்ட அதியா ஷெட்டி

குறிப்பாக விப்ராஜ் நிகம் எங்களிடம் இருந்து போட்டியை கொண்டு சென்று விட்டார். எங்களது தோல்விக்கு காரணமே அவரது சிறப்பான ஆட்டம் என்றே நினைக்கிறேன். எங்களிடம் போதுமான பந்து பேச்சாளர்கள் இருந்தும் அடிப்படை விடயங்களில் ஏற்பட்ட தவறுகளால் இந்த போட்டி எங்களது கையை விட்டு சென்றது என ரிஷப் பண்ட் வருத்தம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -