இவர் என்னுடன் இருப்பதாலும், எனக்கு ஊக்கமளிப்பதாலும் என்னால் சிறப்பாக கேப்டன்சி செய்ய முடிகிறது – பண்ட் வெளிப்படை

Pant

ஐபிஎல் தொடரின் 13வது லீக் போட்டியில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 137 ரன்கள் அடித்தது.

mi

அதிகபட்சமாக ரோகித் சர்மா 44 ரன்களும், இஷான் கிஷன் 26 ரன்களையும் அடித்தனர். டெல்லி அணி சார்பாக அமித் மிஸ்ரா 4 விக்கெட்டுகளையும், ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். அதன் பின்னர் 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 138 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக ஷிகர் தவான் 45 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 33 ரன்களையும் குவித்து அசத்தினர். இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசுகையில் தனது கேப்டன்சி வெற்றி குறித்தும் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் சில விஷயங்களை பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

நான் விக்கெட் கீப்பராக இருப்பது போட்டியை நன்றாக கணிக்க முடிகிறது. மேலும் கேப்டனாக எனது பணி சிறப்பாக இருக்க அணி நிர்வாகமும், பயிற்சியாளர்களும் எனக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதால் என்னால் சரியாக கேப்டன் செய்ய முடிகிறது என நினைக்கிறேன். மேலும் நான் எடுக்கும் முடிவுகளும் தெளிவாக இருப்பதால் கேப்டன்சியை என்னால் சிறப்பாக பணியாற்ற முடிகிறது.

- Advertisement -

Pant

இந்த கொரோனா காலத்தில் கிரிக்கெட் விளையாடுவது சற்று கடினமாக இருந்தாலும் அணிக்குள் நாம் இருப்பதால் அதைப்பற்றி பெரிதாக யோசிப்பதில்லை. பி.சி.சி.ஐ எங்களை மிகவும் பாதுகாப்பாக வைத்து இருக்கிறது. இப்போது நாங்கள் போட்டிகளில் விளையாடுவதை மட்டுமே யோசித்து விளையாடி வருகிறோம் என பண்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.