என்னால இந்த விஷயத்தை ஜீரணிக்கவே முடியல. இந்திய அணியின் கேப்டனானது குறித்து பேசிய – ரிஷப் பண்ட்

Dravid Rishabh Pant
Advertisement

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி இன்று இரவு 7 மணிக்கு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது அணியின் கேப்டனாக இளம் வீரர் கே.எல் ராகுல் நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்த இந்திய அணியில் கேப்டன் ராகுல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் நேற்று ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறினர். அதனை தொடர்ந்து இந்திய அணியின் புதிய கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

Pant-3

இந்த தொடர் முழுவதுமே அவர் கேப்டனாகவும், ஹார்டிக் பாண்டியா துணை கேப்டனாகவும் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. இப்படி இந்திய அணியின் கேப்டனாக முதன்முறையாக செயல்பட உள்ள ரிஷப் பண்ட்டிற்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அதே வேளையில் தான் கேப்டன் பொறுப்பு ஏற்றது குறித்து ரிஷப் பண்ட்டும் தற்போது சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியின் கேப்டன் பதவி எனக்கு கிடைத்ததை நினைத்து என்னால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை.

- Advertisement -

ராகுல் காயம் அடைந்த பிறகு புதிய கேப்டன் அறிவிப்பிற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு தான் எனக்கு இந்திய அணியின் கேப்டன் பதவி வழங்கப்பட இருப்பது தெரியும் என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய : அவர் இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டது ஒரு அற்புதமான உணர்வு. நான் எனது சொந்த மைதானத்தில் விளையாடும் போட்டியிலேயே எனக்கு கேப்டன் பதவி கிடைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சி. என்னை நம்பி இவ்வளவு பெரிய பொறுப்பினை வழங்கிய பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழுவினர் ஆகியோருக்கு நன்றி.

Pant

எனக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்பினை பயன்படுத்தி இந்திய அணியை மிகச் சிறப்பாக வழி நடத்துவேன். மேலும் என்னால் முடிந்த அளவு நான் என்னுடைய பங்களிப்பை இந்திய அணிக்காக வழங்கி தொடர்ந்து வெற்றிகளைப் பெற்றுத் தரவேண்டும் என்பதில் மட்டுமே உறுதியாக இருக்கிறேன். என்னுடைய நலம் விரும்பிகள், எனக்கு ஆதரவு தெரிவித்தவர்கள், என்னுடன் பயணித்தவர்கள் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அணியை முதல் முறையாக தலைமை தாங்கி வழிநடத்த இருப்பது மிகப்பெரிய பொறுப்பு என்னுடைய இந்தப் பணியை நான் மிகச் சிறப்பாக செய்வேன் என்று ரிஷப் பண்ட் கூறினார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ஒரு கேப்டனாக நான் செயல்பட இருப்பது மிகவும் பெருமையான விஷயம் என்றாலும் அதே வேளையில் ஐபிஎல் தொடரில் நான் ஏற்கனவே கேப்டனாக செயல்பட்டு உள்ளதால் அதில் இருந்து நிறைய விடயங்களைக் கற்றுக் கொண்டுள்ளேன். எந்தெந்த இடத்தில் தவறுகள் நடந்து உள்ளதோ அதை எல்லாம் தற்போது படிப்படியாக சரி செய்து வருகிறேன். நிச்சயம் ஐபிஎல்-லில் கேப்டனாக பணியாற்றிய அந்த அனுபவம் இந்திய அணியை கையாளவும் எனக்கு கை கொடுக்கும்.

இதையும் படிங்க : கேப்டனாக விராட் கோலியை முந்தி சச்சின் படைக்காத இரட்டை உலகசாதனை படைத்த பாபர் அசாம்

கடந்த ஒரு ஆண்டாகவே இந்திய அணியின் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் முதன்மை வீரராக செயல்பட்டு வரும் 24 வயதான ரிஷப் பண்ட் இந்திய அணியின் எதிர்காலம் கேப்டனாக பார்க்கப்பட்டு வருவதால் தற்போது அவரை முன்னேற்றவே இந்த கேப்டன் பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் சுரேஷ் ரெய்னாவிற்கு அடுத்து இளம் வயதிலேயே இந்திய டி20 அணியை வழிநடத்தும் இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் இன்றைய போட்டியில் ரிஷப் பண்ட் நிகழ்த்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement