
டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக நேற்று லக்னோ நகரில் நடைபெற்ற நடப்பு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 40-வது ஆட்டத்தில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி சொந்த மண்ணில் மோசமான தோல்வியை சந்தித்திருப்பது மிகப்பெரிய அளவில் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. ஏனெனில் நேற்றைய போட்டியின் போது முதலில் விளையாடிய லக்னோ அணிக்கு நான்காவது வீரராக ரிஷப் பண்ட் வழக்கம்போல் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் வழக்கமாக தான் விளையாடும் அந்த இடத்தில் நேற்று அப்துல் சமாத்தை ரிஷப் பண்ட் களமிறங்கினார். அதன் பின்னர் டேவிட் மில்லர், ஆயுஸ் பதோனி என அடுத்தடுத்து வீரர்களை முன்கூட்டியே அனுப்பிவிட்டு ஏழாவது வீரராக போட்டியின் கடைசி இரண்டு பந்துகள் மீதி இருக்கும் வேளையில் களமிறங்கி போட்டியின் இறுதிப்பந்தில் அவுட்டும் ஆகியிருந்தார்.
இப்படி ரிஷப் பண்ட் தாமதமாக களமிறங்க அவருக்கு கையில் ஏற்பட்ட சிறிய காயம் காரணமாக பார்க்கப்பட்டாலும் அப்படி காயம் இருக்கும்போது பிளேயிங் லெவனில் அவர் ஏன் விளையாட வேண்டும் என்ற கேள்வியும் அதிகரித்துள்ளது. அதேபோன்று இம்பேக்ட் வீரராக இரண்டாம் பாதியில் வேகப்பந்து வீச்சாளர் மாயங்க் யாதவை களம் இறக்குவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில் ஆயுஸ் பதோனியை களமிறக்கி தவறான முடிவினை எடுத்திருந்தார்.
இப்படி அவர் எடுத்த சில முடிவுகளால் அந்த அணி தோல்வியை சந்தித்திருந்த வேளையில் மாயங்க் யாதவை இம்பேக்ட் வீரராக பயன்படுத்தாமல் போனது ஏன்? பேட்டிங்கில் ஏழாவது இடத்தில் களமிறங்கியது ஏன்? என்பது குறித்து போட்டி முடிந்து அவர் சில விளக்கங்களை அளித்திருந்தார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்த போட்டியில் மாயங்க் யாதவை நாங்கள் பயன்படுத்தாதுக்கு காரணம் யாதெனில் :
இம்பேக்ட் வீரராக ஆயுஷ் பதோனியை இறக்கினால் மயங்க் யாதவ் இன்னும் காயத்திலிருந்து மீண்டுவர நேரம் கிடைக்கும். அதேபோன்று அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருந்து தற்போது தான் வந்துள்ளார் என்பதனால் அவர் பிட்டாக இன்னும் அவகாசம் தேவை என்பதற்காகவே இந்த முடிவை எடுத்தோம். அதே போன்று பேட்டிங்கின் போது அப்துல் சமாத்தை முன்கூட்டியே களமிறக்கினால் அவர் இந்த மைதானத்தில் ரன்களை குவிப்பார் என்று நினைத்தோம்.
இதையும் படிங்க : டாஸ் தான் இங்க எல்லாமே.. சொந்த மைதானத்திலேயே நாங்க தோக்க இதுவே காரணம் – ரிஷப் பண்ட் வருத்தம்
அதனாலே அவரை முன்கூட்டியே அனுப்பினோம். பின்னர் மில்லர் உள்ளே சென்றபோது மைதானம் பேட்டிங்கிற்கு கடுமையாக மாறியது. அதனாலேயே நான் பின் வரிசையில் களமிறங்கினேன். இருந்தாலும் இனி வரும் போட்டிகளுக்கு முன்னதாக இது குறித்து ஒன்றாக அமர்ந்து பேசி ஒரு நல்ல முடிவுக்கு வந்து திட்டத்திற்கு ஏற்றார் போல் செயல்படுவோம் என ரிஷப் பண்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.