- Advertisement -
ஐ.பி.எல்

லாஸ்ட் ஓவர் போடறதுக்கு முன்னாடி ஆவேஷ் கானிடம் இதைத்தான் சொன்னேன்.. வெற்றிக்கு பிறகு – ரிஷப் பண்ட் மகிழ்ச்சி

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 36-வது லீக் போட்டியானது நேற்று ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற லக்னோஅணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் குவித்தது.

20 ஆவது ஓவரில் அவேஷ் கானிடம் சொன்னது இதுதான் : ரிஷப் பண்ட்

லக்னோ அணி சார்பாக அதிகபட்சமாக எய்டன் மார்க்ரம் 66 ரன்களையும், ஆயுஸ் பதோனி 50 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை குவித்து 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

இந்த போட்டியில் ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் அணி எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் லக்னோ அணியின் சிறப்பான பந்துவீச்சு காரணமாக அந்த அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறுகையில் :

இதுபோன்ற போட்டியில் பெற்ற வெற்றி மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. நாங்கள் இந்த போட்டியில் விளையாடிய விதம் எங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக உணருகிறேன். எங்களது அணியில் உள்ள வீரர்கள் தற்போது தங்களது பங்களிப்பை உணர்ந்து செயல்பட துவங்கி விட்டனர். பந்துவீச்சாளர்கள் அழுத்தமான வேளையிலும் அதனை சரியாக கையாண்டு பந்து வீசியதாலே இந்த வெற்றி கிடைத்தது.

- Advertisement -

அதிலும் குறிப்பாக ஆவேஷ் கான் வீசிய மூன்று ஓவர்கள் மிகச் சிறப்பாக இருந்தன. கடைசி ஓவருக்கு முன்னதாக நான் அவரிடம் : உங்களது ஐடியாவை நீங்களே சரியாக எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய திட்டத்தை சரியான மனநிலையில் வைத்து பந்து வீசுங்கள். அதே போன்று உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதன்படியே செய்யுங்கள் என்று விட்டுவிட்டேன். அதன் பின்னர் அவரும் பீல்டர்களை சரியாக நிற்கவைத்து பந்துவீசி இருந்தார்.

இதையும் படிங்க : கேரக்டரை உருவாக்கிட்டோம்.. வெறும் 2 ரன்னில் ராஜஸ்தானை வீழ்த்திய திட்டம் இது தான்.. லக்னோ கேப்டன் பண்ட் பேட்டி

அவரது அந்த அசத்தலான பந்துவீச்சு எங்களது வெற்றிக்கு காரணமாகவும் மாறியது. தற்போது மீண்டும் நாங்கள் வெற்றி பாதைக்கு திரும்பியது மகிழ்ச்சி. இருந்தாலும் இன்னும் ஒரு சில இடங்களில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியம் அதுகுறித்து நாங்கள் ஆலோசிக்க இருக்கிறோம் என ரிஷப் பண்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -