IND vs RSA : 5 ஆவது முறையாக டாஸை தோற்ற பிறகு ரிஷப் பண்ட் பேசியது என்ன? – முழுவிவரம் இதோ

Pant
- Advertisement -

கடந்த ஜூன் 9-ஆம் தேதி துவங்கிய இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்றுடன் முடிவுக்கு வந்தது. ஏற்கனவே 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளை பெற்று இருந்ததால் தொடரானது சம நிலையில் இருந்த வேளையில் இந்த இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெங்களூருவில் இன்று நடைபெற இருந்த ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது.

Keshav-Maharaj-and-Rishabh-Pant

இதனால் இரு அணிகளுமே இந்தத் தொடரின் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு கோப்பையை பகிர்ந்து கொண்டனர். இந்த தென்னாப்பிரிக்க தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்ட கேஎல் ராகுல் காயம் காரணமாக இந்தத் தொடரில் இருந்து வெளியேறிய வேளையில் புதிய கேப்டனாக இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டார்.

- Advertisement -

அவரது தலைமையில் இந்திய அணி துவக்கத்தில் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்தாலும் கடந்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. அதன்பிறகு இன்று நடைபெற்ற இருந்த போட்டி மழையால் கைவிடப்பட்டதால் எந்த ஒரு முடிவும் இன்றி இரு அணிகளும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த தொடரில் இதுவரை கேப்டனாக ரிஷப் பண்ட் ஒரு டாசில் கூட வெற்றி பெறவில்லை. 5 போட்டிகளிலுமே தென் ஆப்பிரிக்க கேப்டன் டாஸில் வெற்றிபெற்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தனர்.

இந்நிலையில் இன்றைய போட்டியில் டாசினை இழந்த பிறகு தொடர்ச்சியாக ஐந்தாவது டாஸை இழந்த இந்திய அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேசுகையில் கூறியதாவது : இந்த தொடரில் எங்களுக்கு நிறைய விடயங்கள் கற்றுக்கொள்ள இருந்தன. அதோடு முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த பின்னர் நாங்கள் மீண்டும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றது மிகப்பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது.

- Advertisement -

அதேபோன்று இந்த இறுதிப் போட்டியிலும் நாங்கள் முழு பங்களிப்பை அளிக்க நினைத்தோம். ஒரு கேப்டனாகவும், வீரராகவும் நான் நூறு சதவீத பங்களிப்பை ஒவ்வொரு போட்டியிலும் அளிக்க விரும்புகிறேன். தற்போது நான் உற்றுநோக்கி வருவதெல்லாம் ஒவ்வொரு போட்டியிலும் என்னுடைய பங்களிப்பை வழங்க வேண்டும் என்பது மட்டும்தான். இந்த தொடரில் முதல் முறையாக நான் தொடர்ச்சியாக பல டாஸை தொடர்ந்து இழந்துள்ளேன். ஆனால் டாஸ் என்பது நமது கட்டுப்பாட்டில் கிடையாது என்று ரிஷப் பண்ட் கூறினார்.

இதையும் படிங்க : IND vs RSA : பெங்களூருவில் அடித்து நொறுக்கிய மழையால் 5வது போட்டி ரத்து – அப்போ கோப்பை, தொடர் நாயகன் விருது வென்றது யார்

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இந்த தொடருக்கு அடுத்து இங்கிலாந்தில் நடைபெற உள்ள டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற என்னுடைய பங்களிப்பை வழங்க உள்ளேன். இந்திய அணியில் எனக்கு கிடைக்கும் இடத்தில் என்னால் முடிந்த பங்களிப்பை அளிக்க வேண்டும் என்பதில் மட்டும் குறிக்கோளாய் உள்ளதாக ரிஷப் பண்ட் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement