- Advertisement -
இந்திய கிரிக்கெட்

என்னப்பா இப்படி வெளுக்குற? 2 சம்பவம் செய்த ரிஷப் பண்ட்.. சிரித்த ஸ்டோக்ஸ், கும்பிட்டு வரவேற்ற ராகுல்

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20ஆம் தேதி துவங்கியது. லீட்ஸ் மைதானத்தில் துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா முதல் நாளில் அபாரமாக விளையாடி 359/3 ரன்கள் குவித்தது.

இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே நங்கூரமாக விளையாடி 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கேஎல் ராகுல் 42 ரன்னில் அவுட்டானார். அவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய ஜெயஸ்வால் இங்கிலாந்து மண்ணில் தன்னுடைய முதல் ஆட்டத்திலேயே சதத்தை அடித்து 101 ரன்கள் குவித்து சாதனையுடன் பெவிலியன் திரும்பினார். இடையே அறிமுக வீரர் சாய் சுதர்சன் டக் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார்.

- Advertisement -

ரிஷப் பண்ட் சம்பவம்:

ஆனால் அடுத்ததாக ஜோடி சேர்ந்த கேப்டன் சுப்மன் கில் துணைக் கேப்டன் ரிஷப் பண்ட் ஆகியோர் இங்கிலாந்து பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு ரன் குவிப்பில் ஈடுபட்டனர். முதல் நாளில் எஞ்சிய நேரம் முழுவதும் பேட்டிங் செய்த அந்த ஜோடியில் சுப்மன் கில் கேப்டனாக தன்னுடைய முதல் போட்டியிலேயே சதத்தை அடித்து 127* ரன்கள் விளாசி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். அவருடன் சேர்ந்து விளையாடும் ரிஷப் பண்ட் அரை சதத்தை அடித்து 65* ரன்களுடன் உள்ளார்.

முன்னதாக அந்தப் போட்டியில் 221/3 என்ற சூழ்நிலையில் இந்தியா விளையாடிக் கொண்டிருந்த போது இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பவுலிங் செய்தார். அவருடைய ஒரு பந்தை எதிர்கொண்ட ரிஷப் பண்ட் அதிரடியாக இறங்கி சென்று பென் ஸ்டோக்ஸ் தலைக்கு மேலே ராக்கெட் வேகத்தில் பவுண்டரியை பறக்க விட்டார். தம்முடைய தலைக்கு மேலே நேராக பறந்த பந்தை பென் ஸ்டோக்ஸால் தொட கூட முடியவில்லை.

- Advertisement -

சிரித்த ஸ்டோக்ஸ்:

அதனால் கோபப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் “என்னப்பா இப்படி அடிக்கிற?” என்ற வகையில் ரிசப் பண்ட்டை பார்த்து முகம் சிரிப்பை வெளிப்படுத்தினார். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் மாலை நேரத்தில் இங்கிலாந்து 2வது புதிய பந்தை எடுத்தது. பொதுவாக புதிய பந்து ஸ்விங்காகி சவாலைக் கொடுக்கும் என்பதால் அதை இந்திய பேட்ஸ்மேன்கள் சமாளித்துவிட்டு நாளை முடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதையும் படிங்க: 25 வயதில் இந்தியாவின் கேப்டனாக சதம்.. விராட் கோலியின் 11 வருட சாதனையை சமன் செய்த கில் பதிலடி

ஆனால் கிறிஸ் ஓக்ஸ் வீசிய நாளின் இறுதி ஓவரின் முதல் பந்தை அதிரடியாக எதிர்கொண்ட ரிஷப் பண்ட் டீப் ஸ்கொயர் லெக் பகுதியில் முரட்டுத்தனமான சிக்ஸராக பறக்க விட்டார். அதைப் பார்த்த பென் ஸ்டோக்ஸ், ஓக்ஸ் ஆகிய இருவருமே செய்வதறியாவது புன்னகைத்தனர். அந்த வகையில் முதல் நாளை சிறப்பாக முடித்த ரிசப் பண்ட் பெவிலியனிற்குள் சென்ற போது கேஎல் ராகுல் கையெடுத்து கும்பிட்டு வரவேற்றார்.

- Advertisement -