ஐபிஎல் 2025 : இதெல்லாம் ஒரு வேலையா.. ஆர்சிபி ரசிகரை வெளுத்து வாங்கிய ரிஷப் பண்ட்.. காரணம் என்ன?

Rishabh Pant
- Advertisement -

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தை நடத்துவதற்கு பிசிசிஐ தயாராகி வருகிறது. இம்முறை அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு மெகா ஏலம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக கணிசமான வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும். மேலும் டிரேடிங் முறையில் அணி நிர்வாகங்கள் சில வீரர்களை மாற்றிக் கொள்ள முடியும்.

இந்த சூழ்நிலையில் ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிலிருந்து வெளியேறி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக ஒரு ஆர்சிபி ரசிகர் எக்ஸ் எனப்படும் ட்விட்டரில் பதிவிட்டார். குறிப்பாக ஆர்சிபி அணியில் கேப்டன்ஷிப் பதவி காலியாக இருப்பதால் அதை அடையும் நோக்கத்தில் தனது மேனேஜர் வாயிலாக பெங்களூரு அணியை ரிஷப் பண்ட் தொடர்பு கொண்டதாக அந்த ரசிகர் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

ஆர்சிபி ரசிகரின் செயல்:

ஆனால் ரிஷப் பண்ட் இந்திய அணியிலும் டெல்லி அணியிலும் அரசியல் செய்வதால் ஆர்சிபி நிர்வாகத்திடம் சொல்லி விராட் கோலி அதை தடுத்து விட்டதாகவும் அந்த ரசிகர் பதிவிட்டார். இந்த செய்திக்கான ஆதாரம் ஆர்.சி.பி அணியிலிருந்து தமக்கு கிடைத்ததாகவும் அந்த ரசிகர் செப்டம்பர் 26ஆம் தேதி காலை 9.37 மணிக்கு ட்விட்டரில் பதிவிட்டார்.

அதைப் பார்த்து கடுப்பான ரிஷப் பண்ட் பொய்யான செய்திகளை ஏன் பரப்புகிறீர்கள்? இதெல்லாம் ஒரு பொழப்பா என்ற வகையில் அந்த ரசிகருக்கு கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் ரிஷப் பண்ட் அந்த ரசிகருக்கு பதிலளித்துள்ளது பின்வருமாறு. “பொய்யான செய்தி. சமூக வலைதளங்களில் ஏன் இது போன்ற போலியான செய்திகளை பரப்புகிறீர்கள்”

- Advertisement -

ரிஷப் பண்ட் விளாசல்:

“மிகவும் மோசமானவர்களே கொஞ்சம் புத்திசாலித்தனமாக இருங்கள். எக்காரணம் கொண்டு நம்பத் தகாத சூழலை உருவாக்காதீர்கள். இது முதல் முறையல்ல. கடைசியாகவும் இருக்கப்போவதில்லை. ஆனால் நான் இதை வெளியிட வேண்டியிருந்தது. தயவு செய்து எப்போதும் உங்களுடைய ஆதாரங்களை சரி பார்க்கவும். ஒவ்வொரு நாளும் அது மோசமாகி வருகிறது. மற்ற அனைத்தும் உங்களைப் பொறுத்தது”

இதையும் படிங்க: நானே நினைச்சு பாக்கல.. பார்டர் – கவாஸ்கர் கோப்பையை இந்தியா 3வது முறை வெல்லுமா? யுவ்ராஜ் கணிப்பு

“இது உங்களுக்காக மட்டுமல்ல. தவறான தகவல் பரப்பும் அனைத்து நபர்களுக்குமான பதில்” என்று கூறியுள்ளார். முன்னதாக கடந்த 2016 முதல் டெல்லி அணிக்காக ரிஷப் பண்ட் தொடர்ந்து விளையாடி வருகிறார். தற்போது டெல்லியின் கேப்டனாக முன்னேறியுள்ள அவர் அந்த அணியை விட்டு வெளியேறி ஆர்சிபி அணிக்காக விளையாடப் போவதில்லை என்று இந்தப் பதிவால் மறைமுகமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement