2023 ஆசிய கோப்பை, உ.கோ தொடரில் ரிஷப் பண்ட் கண்டிப்பா விளையாட மாட்டாரு – அவரே உறுதிப்படுத்திய தகவல் இதோ

Rishabh Pant
- Advertisement -

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் துவங்குகிறது. அதில் சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் இந்தியா 2011 போல கோப்பையை வென்று 10 வருடங்களாக ஐசிசி தொடரில் சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது. இருப்பினும் 4 வருடங்கள் கடந்தும் நம்பர் 4வது இடத்தில் விளையாடப் போகும் வீரருக்கான பிரச்சனை இன்னும் தீராமல் இருக்கிறது. மேலும் அந்த இடத்தில் விளையாடுவார் என்று கருதப்படும் ஸ்ரேயாஸ் ஐயர் இன்னும் முழுமையாக குணமடையாமல் இருப்பதும் ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

அத்துடன் 2011 உலகக் கோப்பையில் யுவராஜ் சிங், ரெய்னா, கெளதம் கம்பீர் போன்ற இடது கை பேட்ஸ்மேன்கள் வெற்றியில் முக்கிய பங்காற்றிய நிலையில் தற்போதைய பேட்டிங் வரிசையில் அனைவருமே வலது கை பேட்ஸ்மேன்களாக இருப்பதும் மற்றொரு பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. அதை சரி செய்வதற்காகவே வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் தடுமாறினாலும் ரிஷப் பண்ட்டுக்கு தொடர்ந்து ஏராளமான வாய்ப்புகளை அணி நிர்வாகம் கொடுத்து வந்தது.

- Advertisement -

விளையாட மாட்டாரா:
அதில் டி20 கிரிக்கெட்டில் தடுமாற்றமாகவே செயல்பட்ட அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு வழியாக கடந்த 2022 ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டியில் 125* ரன்கள் அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். அதனால் தொடர்ந்து அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் துரதிஷ்டவசமாக கார் விபத்தில் சிக்கி உயிர் தப்பி தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்து வருகிறார்.

இந்த நிலையில் ஆசிய மற்றும் உலகக்கோப்பை தொடர்கள் நெருங்கி வருவதால் காயத்தை சந்தித்துள்ள வீரர்கள் இறுதிக்கட்டமாக குணமடைந்து தயாராகி வருகிறார்கள். அதில் பும்ரா முழுமையாக குணமடைந்து அயர்லாந்து டி20 தொடரில் கேப்டனாக களமிறங்கும் நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோர் என்சிஏவில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் விரைவில் ஆசிய கோப்பைக்கான அணி அறிவிக்கப்படுவதால் அதில் இணைவதற்காக கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் பெங்களூருவில் இருக்கும் எம்சிஏவில் நடைபெற்ற பயிற்சி போட்டியில் முழுமையாக விளையாடி வருகிறார்கள்.

- Advertisement -

அதை வீடியோவாக எடுத்த ரிசப் பண்ட் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைக்கிறது. ஆனால் அந்த பயிற்சி போட்டியில் அவர் விளையாடாமல் வேடிக்கை மட்டுமே பார்த்தார் என்பது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. அதாவது ராகுல், ஸ்ரேயாஸ் ஆகியோரை விட பெரிய காயங்களை சந்தித்ததால் ரிஷப் பண்ட் குணமடைய நீண்ட நாட்களாகும் என்று ஏற்கனவே செய்திகள் தெரிவித்தன.

குறிப்பாக மற்ற வீரர்களைப் போல் அல்லாமல் விக்கெட் கீப்பராக இருப்பதால் அடிக்கடி உட்கார்ந்து எழுந்திருக்க வேண்டும் என்ற காரணத்தால் அவ்வளவு சீக்கிரமாக குணமடைந்து பயிற்சிகளை எடுத்து விளையாட முடியாது என்று தெரிவித்த இசாந்த் சர்மா 2024 ஐபிஎல் தொடரில் தான் ரிஷப் பண்ட் கம்பேக் கொடுப்பார் என்ற உண்மையை வெளிப்படையாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். தற்போது 2023 ஆசிய கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதற்காக கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் பயிற்சி போட்டிகளில் விளையாடும் நிலையில் ரிஷப் பண்ட் அதை வேடிக்கை மட்டுமே பார்த்தார் என்பது அந்த செய்திகளை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

- Advertisement -

அதாவது இன்னும் முழுமையாக குணமடையாததால் 2023 ஆசிய மற்றும் உலக கோப்பையில் ரிஷப் பண்ட் விளையாட மாட்டார் என்பது அவர் வெளியிட்டுள்ள வீடியோவிலிருந்து மறைமுகமாக தெரிய வருகிறது. மேலும் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக பயிற்சிகளை செய்து வருகிறார் என்பது அதை ஒன்றுக்கு இரண்டு முறை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க:முதல் முறையா தெ.ஆ தேசிய அணிக்கு தேர்வாகிய டெவால் ப்ரேவிஸ் – திலக் வர்மா கொடுத்த ரிப்ளை

இதை தொடர்ந்து 2024 பிப்ரவரியில் சொந்த மண்ணில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் கம்பேக் கொடுத்து அப்படியே ஐபிஎல் தொடரிலும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement