போட்டிக்கு ஆள் வந்ததும் இப்படி ஒரு ஆட்டமா ! உஷாரான பண்ட், வலுவான நிலையில் இந்தியா – முழுவிவரம்

Rishabh Pant
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்கும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ரத்து செய்யப்பட்ட 5-வது போட்டி வரும் ஜூலை 1-ஆம் தேதியன்று துவங்குகிறது. கடந்த வருடம் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் அபாரமாக செயல்பட்டு வீழ்த்திய விராட் கோலி தலைமையிலான இந்திய 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை வகித்த போது அந்த தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது. எனவே தற்போது பர்மிங்காம் நகரில் நடைபெறப்போகும் இப்போட்டியில் வென்று 2007க்கு பின் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல ரோகித் சர்மா தலைமையிலான இந்தியாவும் அதற்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்து சொந்த மண்ணில் தலை நிமிர இங்கிலாந்தும் போராட உள்ளது.

கலக்கிய பரத்:
அப்போட்டிக்கு தயாராக லீசெஸ்டர்ஷைர் கவுண்டி அணிக்கு எதிராக 4 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் இந்தியா பங்கேற்று வருகிறது. ஜூன் 23இல் துவங்கிய அந்த போட்டியில் இந்தியாவுடன் போட்டி போடும் அளவுக்கு தரமான வீரர்கள் குறைவாக இருந்ததாலும் அணியில் இடம்பெற்றுள்ள அனைத்து இந்திய வீரர்களும் களமிறங்கி பயிற்சி எடுக்கும் வகையிலும் ஜஸ்பிரித் பும்ரா, ரிஷப் பண்ட், பிரஸித் கிருஷ்ணா மற்றும் செடேஸ்வர் புஜாரா ஆகிய 4 வீரர்கள் லீசெஸ்டர்ஷைர் அணிக்காக களமிறங்கியது ஆச்சரியமாக இருந்தது.

- Advertisement -

அதைத்தொடர்ந்து துவங்கிய போட்டியில் டாஸ் வென்ற ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு சுப்மன் கில் 21, ஹனுமா விஹாரி 3, ரோஹித் சர்மா 25, ஷ்ரேயஸ் ஐயர் 0, ரவீந்திர ஜடேஜா 13 என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி சொற்ப ரன்களில் அவுட்டாகி சென்றார்கள். அதனால் 81/5 என திணறிய இந்தியாவை காப்பாற்ற போராடிய விராட் கோலியும் 33 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார்.

அதனால் 150 ரன்களை தாண்டாது என எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவுக்கு நல்லவேளையாக இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஸ்ரிகர் பரத் நங்கூரமாகவும் சிறப்பாகவும் பேட்டிங் செய்தார். அவருக்கு உறுதுணையாக கடைசி நேரத்தில் உமேஷ் யாதவ் 23 ரன்களும், முகமது சமி 18* ரன்கள் எடுத்து கை கொடுத்ததை பயன்படுத்திய பரத் அரைசதம் கடந்து அற்புதமாக பேட்டிங் செய்து 8 பவுண்டரி 1 சிக்சருடன் 70* (111) ரன்கள் எடுத்து இந்தியாவை ஓரளவு காப்பாற்றினார். அப்போது தங்களது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக கேப்டன் ரோகித் சர்மா அறிவித்தார். லீசெஸ்டர்ஷைர் சார்பில் அதிகபட்சமாக ரோமன் வால்க்கர் 5 விக்கெட் எடுத்தார்.

- Advertisement -

மீண்டெழுந்த இந்தியா:
அதை தொடர்ந்து களமிறங்கிய லீசெஸ்டர்ஷைர் அணிக்கு சாமுவேல் எவன்ஸ் 1 ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த இந்தியாவின் புஜாரா முகமது ஷமி பந்தில் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். போதாகுறைக்கு லூயிஸ் கிம்பார் 31, ஜோயி எவன்ஸ் 22 என முக்கிய பேட்ஸ்மேன்களை இந்திய பவுலர் சிராஜ் அவுட்டாக்கி பெவிலியன் திருப்பி வைத்தார். அதனால் 71/4 என தடுமாறி அந்த அணியும் 150 ரன்களை தாண்டுமா என எதிர்பார்க்கப்பட்ட போது நங்கூரத்தை போட்ட இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் மற்றொரு வீரர் ரிசி படேலுடன் இணைந்து நிதானமாக பேட்டிங் செய்து சரிவை சரி செய்தார். அதில் ரிஷி பட்டேல் 34 ரன்களில் அவுட்டாக மறுபுறம் அற்புதமாக பேட்டிங் செய்த பண்ட் 14 பவுண்டரி 1 சிக்சருடன் அரைசதம் கடந்து 76 (87) ரன்கள் குவித்து தனது அணியை காப்பாற்றி ஆட்டமிழந்தார்.

அதை தொடர்ந்து ரோமன் வால்க்கர் 34 ரன்கள் ரன்கள் எடுத்த போதிலும் லீசெஸ்டர்ஷைர் 244 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஷமி, ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும் தாகூர், சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

- Advertisement -

அதை தொடர்ந்து 2 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 2-வது நாள் முடிவில் 80/1 என்ற நிலையுடன் 82 ரன்கள் முன்னிலையுடன் வலுவாக உள்ளது. 2-வது இன்னிங்சில் ரோகித் சர்மா ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்காத நிலையில் 38 ரன்களில் சுப்மன் கில் அவுட்டாக மீண்டும் அற்புதமாக பேட்டிங் செய்து வரும் பரத் 31* ரன்களுடனும் விஹாரி 9* ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

உஷாரான பண்ட்:
முன்னதாக இப்போட்டியில் இந்தியாவுக்காக இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பரத் இதுவரை அவுட்டே ஆகாமல் 101* ரன்களை எடுத்து அற்புதமாக பேட்டிங் செய்து வருகிறார். ஆனால் சமீபத்திய தென் ஆப்ரிக்க தொடரில் படுமோசமாக பேட்டிங் செய்து கடும் விமர்சனங்களுக்கு உள்ளான ரிஷப் பண்ட் அவரின் ஆட்டத்தை பார்த்து உஷாராகி இப்படியே விட்டால் டெஸ்ட் அணியிலும் தன்னுடைய இடம் பறிபோய்விடும் என்ற பயம் கலந்த பொறுப்புடன் 76 ரன்கள் விளாசியதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கலகலப்புடன் பேசுகின்றனர்.

இதையும் படிங்க : IND vs IRE : இந்தியா அயர்லாந்து டி20 தொடரை எந்த சேனலில் பார்க்கலாம்? – எத்தனை மணிக்கு பார்க்கலாம்?

அதிலும் உமேஷ் யாதவ் வீசிய பந்தில் ஸ்கூப் ஷாட் வாயிலாக சிக்ஸர் அடித்த அவர் பழைய ஃபார்முக்கு திரும்பிவிட்டேன் என்று கேப்டன் ரோகித் சர்மாவுக்கு காட்டியதாகவும் ரசிகர்கள் கூறுகின்றனர்.

Advertisement