IND vs IRE : இந்தியா அயர்லாந்து டி20 தொடரை எந்த சேனலில் பார்க்கலாம்? – எத்தனை மணிக்கு பார்க்கலாம்?

IND-vs-IRE
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரானது சமநிலையில் முடிந்த கையோடு தற்போது ஹார்டிக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரானது நாளை டூப்ளின் நகரில் நடைபெற உள்ளது. ஜூன் 26 ஆம் தேதி முதலாவது டி20 போட்டியும், ஜூன் 28-ஆம் தேதி 2வது டி20 போட்டியும் டூப்ளின் நகரில் நடைபெறுகிறது.

Indian-Team

- Advertisement -

இந்த தொடருக்கான இந்திய அணியில் ஹார்டிக் பாண்டியா கேப்டனாகவும், புவனேஸ்வர் குமார் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே முதன்மை வீரர்களை கொண்ட இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருப்பதால் தற்போது பாண்டியா தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்த இந்திய அணி அயர்லாந்து அணியை எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஹர்திக் பாண்டியா முதல் முறையாக இந்திய அணியை தலைமை தாங்கி வழி நடத்த இருப்பதால் இந்த தொடர் மீதான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தில் உள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான அணியில் முற்றிலும் இளம் வீரர்களே விளையாட உள்ளதால் இந்த தொடர் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரானது அயர்லாந்து நாட்டில் நடைபெற உள்ளதால் போட்டி எத்தனை மணிக்கு துவங்கும்? எந்த சேனலில் பார்க்கலாம்? என்பது போன்ற ரசிகர்களுக்கு தேவையான தகவலை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.

sony

அதன்படி இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இந்த இரண்டு போட்டிகளும் டூப்ளின் நகரில் நடைபெறுகிறது. அதோடு இவ்விரு போட்டிகளையும் இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு நாம் நேரலையில் காணலாம். அதோடு வழக்கம்போலவே இந்தியாவில் நடைபெறும் போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் கண்டுகளித்த ரசிகர்கள் தற்போது அந்த சேனலில் இந்த தொடரை காணமுடியாது.

- Advertisement -

சோனி சிக்ஸ் டெலிவிஷன் இந்த தொடரை நேரடியாக ஒளிபரப்பு செய்ய இருக்கிறது. இதன் காரணமாக ரசிகர்கள் சோனி சிக்ஸ் சேனலில் மட்டுமே இந்த போட்டியை பிரத்யேகமாக காணமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஹார்டிக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியில் நாளைய முதலாவது டி20 போட்டியில் பங்கேற்க இருக்கும் உத்தேச உத்தேச பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : IND vs IRE : நாளைய முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

1) ருதுராஜ் கெய்க்வாட், 2) இஷான் கிஷன், 3) சஞ்சு சாம்சன், 4) சூரியகுமார் யாதவ், 5) ஹார்டிக் பாண்டியா, 6) தினேஷ் கார்த்திக், 7) அக்சர் படேல், 8) ஹர்ஷல் படேல், 9) புவனேஷ்வர் குமார், 10) ஆவேஷ் கான், 11) யுஸ்வேந்திர சாஹல்

Advertisement