IND vs IRE : நாளைய முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

Indian-Team
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிவடைந்ததால் இரு அணிகளுமே வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு கோப்பை பகிர்ந்து அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நாளை ஜூன் 26-ஆம் தேதி துவங்குகிறது.

- Advertisement -

டப்ளின் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டிக்கான இந்திய அணி நேற்று அயர்லாந்து சென்று பயிற்சியில் ஈடுபட்டுவருகிறது. முதன்மை இந்திய அணி தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளதால் இளம் வீரர்களை கொண்டு ஹார்டிக் பாண்டியா தலைமையின் கீழ் இந்திய அணியானது அயர்லாந்து அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது.

இந்த தொடருக்கான இந்திய அணியில் ஐபிஎல் தொடரில் கலக்கிய பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் இந்திய இளம் வீரர்களின் செயல்பாடு எவ்வாறு இருக்கப் போகிறது என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இந்நிலையில் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான நாளைய முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு அமையும் என்பதை நாங்கள் உத்தேச அணியாக இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

Avesh-Khan

அதன்படி ஏற்கனவே தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் விளையாடிய அணியில் இருந்து ஷ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய வெளியேறி உள்ளதால் அவர்களுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் மற்றும் சஞ்சு சாம்சன் அந்த இடத்தை நிவர்த்தி செய்வார்கள். அது தவிர அணியில் பெரிய மாற்றம் இருக்காது என்று தெரிகிறது.

- Advertisement -

அதோடு இந்த அயர்லாந்து அணிக்கெதிரான தொடருக்கான இந்திய அணியில் முதன்முறையாக இடம்பெற்றிருக்கும் ராகுல் திரிப்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்காது என்றே தெரிகிறது. எனவே அவரும் உம்ரான் மாலிக் மற்றும் அர்ஷ்தீப் சிங் போன்று இந்திய அணியின் அறிமுக வாய்ப்புக்காக காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி நாளைய அயர்லாந்து அணிக்கெதிரான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : சதமடித்த பிறகும் 14 போட்டியில் வெளிய உட்கார வச்சாங்க – தனது வருத்தத்தை பகிர்ந்த இந்திய வீரர்

1) ருதுராஜ் கெய்க்வாட், 2) இஷான் கிஷன், 3) சஞ்சு சாம்சன், 4) சூரியகுமார் யாதவ், 5) ஹார்டிக் பாண்டியா, 6) தினேஷ் கார்த்திக், 7) அக்சர் படேல், 8) ஹர்ஷல் படேல், 9) புவனேஷ்வர் குமார், 10) ஆவேஷ் கான், 11) யுஸ்வேந்திர சாஹல்

Advertisement