ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் 70வது மற்றும் கடைசி லீக் போட்டி மே 27ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு லக்னோவில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் ஏற்கனவே லீக் சுற்றுடன் வெளியேறிய லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. இப்போட்டியில் வென்றால் மட்டுமே குவாலிபயர் ஒன்றுக்கு தகுதி பெற முடியும் என்ற சூழ்நிலையில் பெங்களூரு களமிறங்கியது.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் களமிறங்கிய அந்த அணிக்கு எதிராக மேத்தியூ பிரட்ஸ்கே 14 (12) ரன்னில் நுவான் துஷாரா வேகத்தில் போல்டானார். ஆனால் அடுத்ததாக வந்த கேப்டன் ரிஷப் பண்ட் இந்த வருடத்திலேயே முதல் முறையாக அதிரடியாக விளையாடிய ரன்களை குவித்தார். அவருடன் சேர்ந்து மறுபுறம் விளையாடிய மிட்சேல் மார்ஷ் தமது பங்கிற்கு அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார்.
ரிஷப் பண்ட் மாஸ்:
அந்த வகையில் ஆர்சிபி பவுலர்களை வெளுத்து வாங்கிய இந்த ஜோடியில் இருவருமே அரை சதத்தை அடித்தார்கள். நேரம் செல்ல செல்ல நங்கூரத்தைக் கலந்த அதிரடியை வெளிப்படுத்திய அந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 152 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து ஆர்சிபி அணியை கலங்கடித்தது. அப்போது மார்ஷ் 67 (37) ரன்னில் புவனேஸ்வர் குமார் வேதத்தில் விக்கெட்டை இழந்தார்.
ஆனால் இந்தப் பக்கம் தொடர்ந்து மிரட்டலாக விளையாடி ரிஷப் பண்ட் 53 பந்துகளில் சதத்தை அடித்து அசத்தினர். இந்த வருடம் 27 கோடிக்கு வாங்கப்பட்ட அவர் மிகவும் மோசமாக பேட்டிங் செய்து லக்னோவின் தோல்விக்கு காரணமாக அமைந்தார். அதனால் கடுமையான விமர்சனங்கள் மற்றும் கிண்டல்களை சந்தித்த அவர் இப்போட்டியில் காலம் கடந்து சதத்தை அடித்து குட்டிக்கரணம் போட்டு கொண்டாடியது லக்னோ ரசிகர்களுக்கும் உரிமையாளருக்கும் ஆறுதலாக அமைந்தது.
மண்ணை போட்ட பண்ட்:
மேலும் 2018க்குப்பின் 7 வருடங்கள் கழித்து ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் தம்முடைய 2வது சதத்தை அடித்தார். அத்துடன் லக்னோவுக்காக வேகமான சதத்தை அடித்த வீரராகவும் அவர் சாதனை படைத்தார். அது போக லக்னோ மைதானத்தில் சதத்தை அடித்த அவர் சாதனை படைத்தார். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் 11 பவுண்டரி 8 சிக்ஸரை பறக்க அவர் 118* (61) ரன்கள் விளாசி அபார ஃபினிஷிங் கொடுத்தார்.
இதையும் படிங்க: ரோஹித் சர்மா விராட் கோலி போனா என்ன? எல்லாத்தையும் அவங்க பாத்துப்பாங்க – கபில் தேவ் நம்பிக்கை
இறுதியில் பூரான் 13 ரன்களை எடுத்த உதவியுடன் 20 ஓவரில் லக்னோ 227/3 ரன்கள் எடுத்து அசத்தியது. இந்த வருடம் முழுவதும் சொதப்பிய ரிசப் பண்ட் குவாலிபயர் 1க்கு ஆர்சிபி செல்ல நிச்சயம் வென்றாக வேண்டும் என்ற இப்போட்டியில் சதத்தை அடித்துள்ளார். அதனால் ஆர்சிபி கனவில் மண்ணை அள்ளிப்போடும் வகையில் அவர் விளையாடியுள்ளதாக ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பேசுகின்றனர்.



