நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் இருந்து கடைசி நேரத்தில் விலகிய – இந்திய நட்சத்திர வீரர்

IND
- Advertisement -

சுப்மன் கில் தலைமையிலான இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியானது தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி இன்று ஜனவரி 11-ஆம் தேதி வடோதராவில் துவங்குகிறது.

நியூசிலாந்து அணிக்கெதிரான தொடரில் இருந்து விலகிய இந்திய வீரர் :

அதற்கடுத்து ஜனவரி 14 மற்றும் 18 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதன் காரணமாக தற்போது இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் வடோதராவில் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர். அதனால் இந்த முதல் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

- Advertisement -

மேலும் இந்த ஒருநாள் தொடருக்கு அடுத்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரும் நடைபெற இருக்கின்றன. இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த முதலாவது ஒருநாள் போட்டி துவங்க இருக்கும் இந்த கடைசி நேரத்தில் இந்திய அணியின் முன்னணி நட்சத்திர வீரரான ரிஷப் பண்ட் இந்த ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதோடு அவர் இந்த தொடரில் விளையாட மாட்டார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அந்த வகையில் வெளியான தகவலின் படி : இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டிக்காக இரு அணி வீரர்களும் நேற்று தீவிர வலைப்பயிற்சியினை மேற்கொண்ட வேளையில் அப்போது இந்திய வீரர்கள் சார்பாக ரிஷப் பண்டும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

- Advertisement -

அப்படி வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்து கொண்டிருந்த ரிஷப் பண்டுக்கு இடுப்புக்கு மேல் பகுதியில் பந்து தாக்கி காயம் ஏற்பட்டது. அதனால் வலியால் துடித்த அவருக்கு உடனடியாக முதலுதவி செய்யப்பட்டது. ஆனாலும் முதலுதவிக்கு பின்னரும் அவரால் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட முடியவில்லை.

இதையும் படிங்க : நியூஸிலாந்து தொடரில் சச்சின், சங்ககாராவை முந்தி.. கிங் கோலி படைக்க வாய்ப்புள்ள 3 வரலாற்று சாதனைகள்

பின்னர் மைதானத்தில் இருந்து வெளியேறிய அவரை பரிசோதிக்கையில் இந்த ஒருநாள் தொடரில் அவரால் விளையாட முடியாது என்று உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக அவர் நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement