நியூஸிலாந்து தொடரில் சச்சின், சங்ககாராவை முந்தி.. கிங் கோலி படைக்க வாய்ப்புள்ள 3 வரலாற்று சாதனைகள்

Virat Kohli
- Advertisement -

இந்திய அணி 2026 புத்தாண்டில் நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. அந்தத் தொடரில் புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் இந்திய அணிக்காக விளையாட உள்ளார்கள். அதில் கடந்த தென்னாப்பிரிக்க தொடரில் 2 சதங்கள் அடித்த விராட் கோலி தொடர்நாயகன் விருது வென்று இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார்.

எனவே நல்ல ஃபார்மில் இருக்கும் விராட் கோலி நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலும் சிறப்பாக விளையாடி இந்தியாவை வெற்றிகளில் பங்காற்றுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் இத்தொடரில் அவர் படைக்க வாய்ப்புள்ள சில முக்கியமான சாதனைகளின் பட்டியலை பற்றி பார்ப்போம்.
1. டெஸ்ட், ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி மொத்தமாக இதுவரை 27975* ரன்களை குவித்துள்ளார்.

- Advertisement -

சச்சினை முந்தி:

எனவே இத்தொடரில் இன்னும் 25 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் வேகமாக 28000 ரன்களை அடித்த வீரர் என்ற உலக சாதனையை விராட் கோலி படைப்பார். இதற்கு முன் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 644 இன்னிங்சில் 28000 ரன்கள் அடித்துள்ளதே சாதனை. மறுபுறம் 623 இன்னிங்சிலேயே 27975* ரன்களை அடித்துள்ள விராட் கோலி அந்த சாதனையை உடைக்க அதிக வாய்ப்புள்ளது.

2. இத்தொடரில் இன்னும் 42 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் 2வது ரன்கள் அடித்த வீரர் என்ற இலங்கையின் குமார் சங்ககாரா வாழ்நாள் சாதனையை உடைத்து விராட் கோலி புதிய சாதனை படைக்க பிரகாச வாய்ப்புள்ளது. அந்தப் பட்டியல்:
1. சச்சின் டெண்டுல்கர்: 34357
2. குமார் சங்கக்காரா: 28016
3. விராட் கோலி: 27975*
4. ரிக்கி பாண்டிங்: 27483
5. மகிளா ஜெயவர்த்தனே: 25957

- Advertisement -

கிங் கோலி சாதிப்பாரா:

3. இது போக இத்தொடரில் இன்னும் 94 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கர் சாதனையை விராட் கோலி உடைப்பார். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் நியூசிலாந்துக்கு எதிராக 1750 ரன்கள் குவித்து முதலிடத்தில் இருக்கிறார். 2வது இடத்தில் 1657* ரன்கள் குவித்துள்ள விராட் கோலி அவரது சாதனையை உடைக்க அதிக வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: அப்படின்னா ஏன் 2011க்குப்பின் இந்தியாவால் ஜெய்க்க முடியல? கோலியை விமர்சித்த மஞ்ரேக்கருக்கு கில் பதிலடி

4. அதுமட்டுமின்றி 3 போட்டிகளில் 443 ரன்கள் குவிக்கும் பட்சத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை முந்தி வேகமாக 15000 ரன்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையையும் விராட் கோலி படைக்க வாய்ப்புள்ளது. விராட் கோலி இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் 14557* ரன்கள் குவித்துள்ளார். இருப்பினும் 3 போட்டிகளில் 443 ரன்கள் குவித்து அந்த சாதனையை விராட் கோலி படைப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

Advertisement