IND vs RSA : அதுலயே சொதப்புவாரு. இதுல சொல்லவா வேணும் ! ரிஷப் பண்ட் கேப்டன்ஷிப் பற்றி முன்னாள் வீரர் அதிருப்தி

- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் வெற்றிகரமாக நிறைவு பெற்றதை அடுத்து இந்தியா தனது சொந்த மண்ணில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக பங்கேற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் பரபரப்பான தொடக்கத்தை பெற்றுள்ளது. ஏனெனில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் பேட்டிங் பவுலிங்கில் அட்டகாசமாக செயல்பட்ட தென்னாப்பிரிக்கா சொந்த மண்ணில் அடுத்தடுத்த வெற்றிகளால் ராஜாவாக வெற்றி நடை போட்டு வந்த இந்தியாவுக்கு அடுத்தடுத்து தோல்விகளை பரிசளித்து 2 – 0* (3) என்ற கணக்கில் வலுவான முன்னிலை பெற்று அதிர்ச்சி கொடுத்தது. அந்த அணிக்கு சமீபத்திய ஐபிஎல் தொடரில் மிரட்டிய டேவிட் மில்லர் போன்ற வீரர்கள் அதே பார்மை அப்படியே இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தி வெற்றியை பெற்றுக் கொடுத்து வருகின்றனர்.

Henrich Klassen

- Advertisement -

ஆனால் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக், புவனேஸ்வர் குமார் போன்ற ஒருசிலரை தவிர சமீபத்திய ஐபிஎல் தொடரில் அசத்திய நிறைய வீரர்கள் சுமாராக செயல்பட்டு தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளனர். எது எப்படி இருந்தாலும் அடுத்தடுத்த தோல்விகளால் சொந்த மண்ணில் தலைகுனிவுக்கு உள்ளாகியுள்ள இந்தியா ஜூன் 14இல் நடைபெறும் இந்த தொடரின் 3-வது போட்டியில் நிச்சயம் வென்றால் மட்டுமே கோப்பையை வெல்ல முடியும் என்ற வாழ்வா – சாவா நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

சுமார் கேப்டன்ஷிப்:
முன்னதாக இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வெடுக்கும் நிலையில் கேஎல் ராகுல் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். ஆனால் தொடர் துவங்க ஒருநாள் முன்பாக காயத்தால் விலகிய அவருக்கு பதில் திடீரென்று ரிஷப் பண்ட் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அந்த நிலைமையில் ரோகித் சர்மா இல்லாத பொறுப்புடன் செயல்பட வேண்டிய ரிஷப் பண்ட் முதலில் ஒரு பேட்ஸ்மேனாக பெரிய அளவில் ரன்களை எடுக்காமல் சுமாராக செயல்பட்டு வருகிறார்.

Pant

அதைவிட எந்த நேரத்தில் எந்த பவுலரை பயன்படுத்த வேண்டும் என்ற ஒரு கேப்டன் எடுக்க வேண்டிய அடிப்படை முக்கியமான முடிவில் சொதப்பும் அவரின் சுமாரான கேப்டன்ஷிப் இந்தியாவின் தோல்விக்கு ஒரு முக்கிய பங்காற்றி வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. குறிப்பாக சஹால், அக்சார் படேல் போன்றவர்கள் ஒருசில ஓவர்களில் ரன்களை வழங்கினால் அப்போட்டியில் அவர்களின் பவுலிங் அவ்வளவுதான் என்று முடிவெடுக்கும் அவர் முழுமையான 4 ஓவர்களை கொடுப்பதில்லை.

- Advertisement -

ஐபிஎல்லயே சொதப்புவார்:
அது கூட பரவாயில்லை என்பது போல் குறைவான ரன்களைக் கொடுத்து துல்லியமான எக்கனாமியில் பந்து வீசிய ஆவேஷ் கான், ஹர்ஷல் படேல் ஆகியோருக்கும் முழுமையான 4 ஓவர்கள் அவர் ஏன் வழங்கவில்லை என்று யாருக்கும் புரியவில்லை. இந்நிலையில் ஒரு போட்டியில் அழுத்தமான சூழ்நிலை ஏற்படும்போது அதற்காக பதற்றமடைவதாலேயே ரிஷப் பண்ட சரியான முடிவுகளை எடுக்க தடுமாறுகிறார் என்று முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் கூறியுள்ளார். அதனாலேயே ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வழிநடத்திய அவரால் அந்த அணியை பிளே ஆப் சுற்றுக்கு கூட அழைத்துச் செல்ல முடியவில்லை என்றும் தெரிவித்துள்ள அவர் இந்தியாவுக்காக ரிஷப் பண்ட் தடுமாறுதல் எந்த ஆச்சரியமும் இல்லை என்று கூறியுள்ளார்.

Jaffer

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இதே போன்றதொரு சூழ்நிலையை ஐபிஎல் தொடரிலும் நாம் பார்த்தோம். அவர் எந்த அளவுக்கு கேப்டனாக செயல்படுகிறாரோ அந்த அளவுக்கு முன்னேறுவார் என்று கருதுகிறேன். ஆனால் தற்போதைய நிலைமையில் ஒரு போட்டி கடினமாக அழுத்தமாக மாறும் போது உடனடியாக அவர் பதற்றமடைகிறார்” என்று கூறினார்.

- Advertisement -

அவர் கூறுவது போல சமீபத்திய ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் ரோவ்மன் போவெலுக்கு இடுப்புக்கு மேல் வீசப்பட்ட பந்தை அம்பயர் நோ பால் வழங்கவில்லை என்பதற்காக ஒரு கேப்டனாக அதிருப்தியடைந்த அவர் அதோடு நிற்காமல் தமது வீரர்களை பெவிலியனுக்கு அழைத்தது அவரின் கேப்டன்ஷிப் இன்னும் முதிர்ச்சி அடையவில்லை என்பதை தெளிவாக காட்டியது.

amre 2 Pant Umpire No Ball

போராடுங்கள்:
தற்போதைய நிலைமையில் அடுத்த 3 போட்டியில் வென்றால் மட்டுமே கோப்பையை வெல்ல முடியும் என்ற சூழ்நிலையில் டாஸ் அதிர்ஷ்டம் கிடைக்காமல் போனாலும் சிறப்பாக விளையாடி சொந்த மண்ணில் இந்தியாவின் பெருமையை காப்பாற்றுமாறு ரிஷப் பண்ட் தலைமையிலான இந்திய அணிக்கு வாசிம் ஜாபர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க : ஓய்வடைந்த வீரர்களின் வாழ்வை மேம்படுத்த பிசிசிஐ தலைவர் கங்குலி ஏற்பாடு – நன்றியுடன் குவியும் பாராட்டு

“இந்த தொடரில் டாஸ் அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை என்பது உண்மைதான். தற்போது 2 – 0 என்ற நிலைமையில் அடுத்த 3 போட்டியில் ஒன்றில் தோற்றால் கூட வெற்றி பறிபோய்விடும். எனவே டாஸ் பற்றி கவலைப்படாமல் இந்தியா சிறந்த கிரிக்கெட்டை விளையாட வேண்டும். கடந்த 2 போட்டிகளில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்காவுக்கு முடிவும் சாதகமாக அமைந்தது. எனவே அடுத்த 3 போட்டிகளில் இந்தியா குறைந்தது 2 முறையாவது டாஸ் வெல்ல வேண்டும்” என்று கூறினார்.

Advertisement