இப்போ தான் நிம்மதியா பல் துலக்குறேன், வாழ்க்கையை புரிஞ்சுக்கிட்டேன் – விபத்துப் பின் ரிஷப் பண்ட் மனம் திறந்த பேட்டி

Rishabh Pant
Advertisement

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா 3வது போட்டியில் தோல்வியை சந்தித்தது. அதனால் அகமதாபாத் நகரில் நடைபெறும் கடைசிப் போட்டியில் வென்றால் தான் பைனலுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. அதை விட இந்த தொடரில் ரிசப் பண்ட் இல்லையே என்பதே பெரும்பாலான இந்திய ரசிகர்களின் ஆதங்கமாக இருந்து வருகிறது.

Rishabh Pant Ind vs ENg Ravindra Jadeja

ஏனெனில் 2017ஆம் ஆண்டு அறிமுகமான அவர் என்ன தான் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இதுவரை தடுமாறினாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆரம்பம் முதலே மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக இங்கிலாந்து, தென்னாபிரிக்கா போன்ற சவாலான வெளிநாடுகளில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பராக தோனியால் படைக்க முடியாத சாதனையையும் அசால்டாக படைத்த அவர் 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைப்பதற்கு முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

மனம் திறந்த ரிஷப்:
அதிலும் குறிப்பாக 89* ரன்கள் குவித்து மறக்க முடியாத காபா வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அவர் பொதுவாகவே வேகப்பந்து வீச்சாளர்களை விட ஸ்பின்னர்களை இறங்கி இறங்கி வந்து பவுண்டரிகளும் சிக்சர்களுமாக பறக்க விடுவதில் வல்லவர். சொல்லப்போனால் இந்தூரில் 11 விக்கெட்டுகள் எடுத்து சவாலை கொடுத்த நேதன் லயனை சிட்னி, காபா போன்ற அவர்களது சொந்த ஊரிலேயே தெறிக்க விட்ட ரிஷப் பண்ட் 2021 பிப்ரவரியில் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தாறுமாறாக சுழன்ற பிட்ச்சில் 101 ரன்கள் குவித்து இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றினார்.

Pant

மொத்தத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருக்கு நிகர் யாருமே கிடையாது என்று வெளிப்படையாக சொல்லலாம். ஆனால் கடந்த டிசம்பர் மாதம் துரதிஷ்டவசமாக கார் விபத்துக்குள்ளான அவர் தற்போது குணமடைந்து வருவதால் இத்தொடரில் பங்கேற்க முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது அவரது கேரியரை விட இந்தியாவுக்கு தான் பெரிய பின்னடைவை கொடுத்து வருகிறது. இந்நிலையில் குணமடைந்து வரும் இந்த வேளையில் தான் ஒவ்வொரு நாளும் நிம்மதியாக பல் துலக்கி சூரியனை பார்த்து உட்கார்ந்து வாழ்க்கையைப் பற்றி புரிந்து கொள்வதாக ரிஷப் பண்ட் மனம் திறந்து பேசியுள்ளார்.

- Advertisement -

இதற்கு முன் சாதாரண நாட்களில் கிடைப்பதை பெரிதாக பொருட்படுத்தவில்லை என்று தெரிவிக்கும் அவர் தற்போது தான் ஒவ்வொன்றின் அருமையை புரிந்துள்ளதாக கூறியுள்ளார். இது பற்றி விபத்துக்கு பின் முதல் முறையாக கொடுத்த பேட்டியில் அவர் பேசிய பின்வருமாறு. “இப்போது மிகவும் நன்றாக இருக்கும் நான் குணமடைந்து வருகிறேன். கடவுளின் அருள் மற்றும் மருத்துவ குழுவின் ஆலோசனையால் மிக விரைவில் குணமடைவேன் என்று நம்புகிறேன். என்னைச் சுற்றி நடப்பது எதிர்மறையா நேர்மறையா என்று என்னால் சொல்ல முடியவில்லை”

Rishabh Pant

“ஆனால் தற்போது வாழ்க்கையை புத்துணர்ச்சியான கோணத்தில் பார்க்க துவங்கியுள்ளேன். இதற்கு முன் எனது அன்றாட வாழ்வில் கவனிக்காமல் விட்ட சிறுசிறு விஷயங்களுக்கு கூட தற்போது முழுமையாக மதிப்பளிக்கிறேன். இங்கே ஒவ்வொருவரும் தங்களது வாழ்வில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் தினந்தோறும் ஓடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதனால் ஒவ்வொரு நாளும் நமக்கு கிடைக்கும் சிறுசிறு மகிழ்ச்சியான விஷயங்களை நாம் மறந்து விடுகிறோம்”

- Advertisement -

“குறிப்பாக விபத்துக்கு பின் இப்போதெல்லாம் நான் தினந்தோறும் நிம்மதியாக எழுந்து பல் துலக்கி சூரியனுக்கு கீழே அமர்ந்திருக்கிறேன். எனது மிகப்பெரிய உணர்தல் மற்றும் செய்தி என்னவென்றால் ஒவ்வொரு நாளும் ஆசீர்வதிக்கப்படுவதை உணர்வதும் ஒரு ஆசீர்வாதமாகும். இது எனது பின்னடைவிலிருந்து நான் ஏற்றுக்கொண்ட மனநிலையாகும். மேலும் என் வழியில் வரும் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவிக்க முடியும் என்பது எனக்காகவே நான் எடுத்துக்கொண்டேன்”

இதையும் படிங்க:IND vs AUS : நம்ம செய்றது நமக்கே வினையாகுது, பேசாம அதை செய்ங்க – பிட்ச் விவகாரத்தில் இந்தியாவுக்கு கவாஸ்கர் புதிய கோரிக்கை

“உலகை சுற்றிய கிரிக்கெட்டில் கவனம் செலுத்து விரும்பினாலும் தற்போது எனது காலை ஊன்றி நடப்பதில் கவனம் செலுத்துகிறேன். இப்போதைக்கு அனைவரும் இந்திய அணிக்காகவும் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காகவும் ஆதரவு கொடுங்கள். விரைவில் களமிறங்கி உங்கள் அனைவரையும் நான் மகிழ்ச்சியடைய வைப்பேன்” என்று கூறினார்.

Advertisement