Rishabh Pant : மீண்டும் ஒற்றை கையால் சிக்ஸ் அடித்து அசத்திய பண்ட் – வைரல் வீடியோ

கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வீரரான ரிஷப் பண்ட் 31 பந்துகளில் 46 ரன்கள் குவித்து டெல்லி அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார்

Pant-1
- Advertisement -

கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வீரரான ரிஷப் பண்ட் 31 பந்துகளில் 46 ரன்கள் குவித்து டெல்லி அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார். இந்த போட்டியில் குல்தீப் யாதவ் வீசிய 11 ஆவது ஓவரில் ஒற்றை கையால் பிரமாதமான சிக்ஸ் ஒன்றினை அடித்தார். ஒற்றை கையால் சிக்ஸ் அடிப்பது அவரது பேவரைட் ஷாட்டாக மாறிவிட்டது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த வீடியோ :

- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 26 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது டெல்லி அணி. அதன்படி துவக்க வீரர்களாக இங்கிலாந்து அணியை சேர்ந்த டென்லி அறிமுக வீரராக களமிறங்கினார். அவருடன் சுபமான் கில் களமிறங்கினார்.

- Advertisement -

Pant 1

அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக கில் 39 பந்தில் 65 ரன்களும், ரசல் 21 பந்தில் 45 ரன்களும் குவித்தனர். இதனால் டெல்லி அணிக்கு 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று நிர்ணயிக்கப்பட்டது.

pant-2

பிறகு ஆடிய டெல்லி அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்களை குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. டெல்லி அணி சார்பில் அதிகபட்சமாக தவான் 63 பந்தில் 97 ரன்களை அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். மேலும், ஆட்டநாயகன் விருதினையும் தட்டிசென்றார்.

Advertisement