இந்த திட்டத்தை போட்டு வெறுப்பேத்துனாங்க.. கோன்ஸ்டஸ்க்கு எதிராக இந்திய அணி தெறித்தது பற்றி ரிஷப் பண்ட்

Rishabh Pant
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா விளையாடும் ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜனவரி 3ஆம் தேதி துவங்கியது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த 185 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரிசப் பண்ட் 40 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு அதிகபட்சமாக ஸ்காட் போலண்ட் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்ததாக களம் இறங்கிய ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 9-1 ரன்கள் எடுத்துள்ளது.

முன்னதாக அந்தப் போட்டியில் மாலை வேளையில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்வதற்கு 16 நிமிடங்கள் இருந்தது. அப்போது இந்தியா நிறைய ஓவர்கள் வீசுவதை தவிர்ப்பதற்காக உஸ்மான் கவாஜா வேண்டுமென்றே நேரத்தை தாமதப்படுத்தினார். அதனால் அதிருப்தியடைந்த பும்ரா என்னவாயிற்று என்ற வகையில் ரியாக்சன் கொடுத்தார்.

- Advertisement -

தெறித்த இந்திய அணி:

அதற்கு எதிர்புறம் இருந்த சாம் கோன்ஸ்டஸ் தேவையின்றி அவரிடம் சில வார்த்தைகளை பேசினார். அதற்கு பும்ராவும் பதிலடி கொடுக்க சென்றதால் சலசலப்பு ஏற்பட்டது. உடனடியாக நடுவர்கள் உள்ளே புகுந்து தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் தவிர்க்கப்பட்டது. ஆனால் அதற்கு பதிலடியாக அதே ஓவரின் கடைசி பந்தில் கவாஜாவை அவுட்டாக்கிய பும்ரா அவருக்கு மாஸ் பதிலடி கொடுத்தார்.

அதே போல தங்களுடைய கேப்டனை சீண்டிய சாம் கோன்ஸ்டஸ்க்கு விராட் கோலி தலைமையில் இந்திய அணியினர் வெறித்தனமாக கத்தி பதிலடி கொடுத்தார்கள். இந்நிலையில் மாலை நேரத்தில் இந்தியாவின் ஓவர்களை குறைப்பதற்காக ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் வேண்டுமென்றே நேரத்தை தாமதப்படுத்தியதாக ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார். அதனாலேயே அவர்களுக்கு இந்திய அணி தெறிக்க விடும் வகையில் பதிலடி கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

வெறுப்பேற்றும் திட்டம்:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அவர்கள் கொஞ்சம் பேசிக் கொண்டு நேரத்தை வீணடிக்க விரும்பினார்கள் என்று நான் நினைக்கிறேன். அதனாலேயே பும்ராவிடம் சாம் கோன்ஸ்டஸ் பேச்சு கொடுத்தார். அவர் ஏதோ சொன்னார். அது எனக்கு சரியாக கேட்கவில்லை. ஆனால் அவர்கள் நேரத்தை வீணடிக்க விரும்பினார்கள் என்று நான் உணர்ந்தேன். அப்போது தான் எங்களால் இன்னும் ஒரு ஓவர் வீச முடியாது” எனக் கூறினார்.

இதையும் படிங்க: இதுல ரகசியம் என்ன? 60இல் வெறும் 40.. கோலி மாதிரி ரோஹித் கிரேட் கிடையாது.. சஞ்சய் மஞ்ரேக்கர் அதிருப்தி

முன்னதாக கடந்த போட்டியில் அறிமுகமான அவர் பும்ராவை அதிரடியாக எதிர்கொண்டு அடுத்த போட்டிகளிலும் அடிப்பேன் என்று சவால் விட்டார். அதனாலேயே அவருடைய தோளில் விராட் கோலி இடித்து பதிலடி கொடுத்தார். அந்த நிலையில் இப்போட்டியில் சாம் கோன்ஸ்டஸ் மீண்டும் வேலையை காட்டத் துவங்கியுள்ளார். அவருக்கு இரண்டாவது நாளில் விக்கெட்டை எடுத்து மீண்டும் பதிலடி கொடுக்க இந்திய அணி முயற்சிப்பார்கள் என்றே சொல்லலாம்.

Advertisement