
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது ஜூன் 6-ஆம் தேதி நியூ சண்டிகர் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து தங்களது முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுகளை இழந்து 564 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதனை தொடர்ந்து தற்போது தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் ஆப்கானிஸ்தான் அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் குவித்துள்ளது.
இதன் காரணமாக 451 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி விளையாட இருக்கிறது. இந்த போட்டியின் போது முதல் இன்னிங்சில் இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக சுப்மன் கில் 126 ரன்களையும், கே.எல் ராகுல் 100 ரன்களையும் குவித்தனர். அதே வேளையில் சாய் சுதர்சன் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் தலா 81 ரன்கள் குவித்திருந்தனர்.
இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக விளையாடிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் 121 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் என 81 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் அவர் முதல் இன்னிங்ஸில் 3 சிக்ஸர்களை அடித்த வேளையில் முதல் இந்திய வீரராகவும், நான்காவது சர்வதேச வீரராகவும் ஒரு மாபெரும் சாதனையை நெருங்கி வருகிறார். அது குறித்து விவரம் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் ரிஷப் பண்ட் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : கடந்த 2018 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ரிஷப் பண்ட் இதுவரை 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 97 சிக்ஸர்களை அடித்து இந்திய வீரராக டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்சர்களை அடித்த நபராக முதல் இடத்தில் இருக்கிறார்.
இதையும் படிங்க : சூரியகுமார் யாதவை நீக்கி விட்டு ஷ்ரேயாஸ் ஐயரை கேப்டனாக மாற்ற என்ன காரணம்? – அஜித் அகார்கர் பதில்
இன்னும் அவர் மூன்று சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில் இந்திய அணி சார்பாக டெஸ்ட் போட்டிகளில் 100 சிக்ஸர்களை பூர்த்தி செய்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார். அதோடு ஒட்டுமொத்தமாக சர்வதேச அளவில் 100 சிக்ஸர்களை டெஸ்ட் போட்டிகளில் அடித்த நான்காவது வீரர் என்ற சாதனையும் நிகழ்த்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.