விக்கெட் கீப்பிங்கில் சின்ன தவறை செய்து ஒட்டுமொத்தமாக போட்டியை கோட்டை விட்ட பண்ட் – சுட்டிக்காட்டிய ரசிகர்கள்

Pant
- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலியா தொடருக்கு முன்புவரை தன்னுடைய அலட்சியமான கீப்பிங் செய்யும் முறையால் இந்திய ரசிகர்களின் வசவுகளுக்கு ஆளாகியிருந்தார் ரிஷப் பண்ட். ஆனால் ஆஸ்திரேலிய தொடரில் மிகவும் அற்புதமாக கீப்பிங் செய்தார். மேலும் இங்கிலாந்து தொடரிலும் தனது கீப்பிங் திறமையை வெளிக்காட்டினார். ஆனால் நேற்று நடந்த ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் மேட்சில் மீண்டும் தனது அலட்சியமான கீப்பிங் முறையால் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகி உள்ளார் ரிஷப் பன்ட்.

pant 1

- Advertisement -

2021 ஐபிஎல் தொடரின் ஏழாவது லீக் மேட்சில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோதியது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலாவதாக பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அனி 20 ஓவர் முடிவில் 147 ரன்கள் அடித்தது அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரிஷப் பண்ட் 32 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார்.

ஆரம்ப விக்கட்டுகளை வெகுவிரைவாக இழந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணியை தனது பொறுப்பான ஆட்டத்தின் மூலம் சரிவிலிருந்து மீட்டார் ரிஷப் பன்ட். ஒரு கேப்டனாக பேட்டிங்கில் மிகச் சிறப்பாக செயல்பட்டார் ரிஷப் பண்ட். இதையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் வெகுவிரைவாக அவுட்டாகி வெளியேற, அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் டேவிட் மில்லர் அணியை சரிவிலிருந்து மீட்டார். இந்த போட்டியில் டேவிட் மில்லர் 43 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

miller

இந்த போட்டியில் கடைசி 3 ஓவர்களில் 34 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 7 விக்கெட்டுகளை இழந்து ஆடிக்கொண்டிருந்தது ராஜஸ்தான் அணி. அப்போது பேட்டிங் ஆடிக்கொண்டிருந்த உனாத்கட் அதற்கு முந்தைய ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்திருந்தார். 18வது ஓவரின் முதல் பந்தை டாம் கரண் வீச அதை மிட் விக்கெட் திசையில் அடித்தார் கிறிஸ் மோரிஸ். 2 ரன்கள் எடுக்க ஆசைப்பட்ட உனத்கட் பிட்ச்சின் பாதி வரை ஓடி வந்துவிட்டார், ஆனால் கிரிஸ் மோரிஸ் வேண்டாம் என்று சொன்னவுடன் அங்கேயே நின்றுவிட்டார். இதை எளிதாக ரன்னவுட் செய்து உனத்கட்டை பெவியலனுக்கு அனுப்பியிருக்கலாம் ரிஷப் பன்ட்.

- Advertisement -

ஆனால் தனது மெத்தனமான செயலால் அந்த வாய்ப்பை கோட்டைவிட்டார் அணியின் கேப்டனும் கீப்பருமான ரிஷப் பன்ட். பிறகு ஆடிய உனத்கட் எந்த பந்துகளையும் வீணடிக்காமல் எதிரில் நன்றாக ஆடிக்கொண்டிருந்த கிறிஸ் மோரிஸிர்க்கு ஸ்ட்ரைக்கை கொடுத்தார். மோரிஸும் நான்கு சிக்ஸர்கள் அடித்து ராஜஸ்தான் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்துவிட்டார்.

pant 2

ரிஷப் பன்ட்டின் இந்த மெத்தனமான கீப்பிங் செயல் டெல்லி அணியின் ரசிகர்களிடையே மிகுந்த கோபத்தை வரவழைத்துள்ளது. அவர் மட்டும் அந்த வாய்ப்பை பயன்படுத்தி உனத்கட்டை ரன் அவுட் செய்து இருந்தால், உள்ளே வந்த புது பேட்ஸ்மேனை வைத்து சில டாட் பால்களை வீசியிருக்கலாம் என கருத்து தெரிவித்து வருகிறார்கள் டெல்லி ரசிகர்கள். மேலும் பேட்டிங்கில் மட்டும் ஒரு கேப்டனாக சிறப்பாக செயல்பட்டால் போதுமா கீப்பிங்கிலும் ஒரு கேப்டனாக சிறப்பாக செயல்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கி வருகின்றனர்.

Advertisement