ரிஷப் பண்ட் விடயத்தில் என்னதான் நடந்தது? எதுவும் சொல்லாமல் நீக்கியது ஏன்? – விவரம் இதோ

- Advertisement -

நியூசிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய இந்திய அணியானது அடுத்ததாக தற்போது வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி இன்று டாக்கா மைதானத்தில் நடைபெற்று முடிந்தது.

Bangladesh

- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றதுடன் இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இந்த ஒருநாள் தொடருக்கான அணியில் இடம் பெற்றிருந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் இந்த ஒருநாள் தொடரில் இருந்து வெளியேறியதாக போட்டிக்கு முன்பு பிசிசிஐ அறிவித்திருந்தது.

ஏற்கனவே சமீப காலமாக சொதப்பி வரும் ரிஷப் பண்டை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பிய வேளையில் அவர் இன்று திடீரென ஒருநாள் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டது அனைவரது மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஆனால் ரிஷப் பண்ட் வெளியேறுவதற்கு என்ன காரணம் என்பது குறித்த சரியான தகவல் இதுவரை கிடைக்கவில்லை.

Rishabh Pant

இருப்பினும் பிசிசிஐ மருத்துவ குழுவினரின் ஆலோசனைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் டிசம்பர் 14-ஆம் தேதி துவங்கும் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் மீண்டும் இணைவார் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால் பண்ட்க்கு ஏதேனும் காயம் ஏற்பட்டுள்ளதா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சினையா? என்பது குறித்த தெளிவான தகவலை பிசிசிஐ வெளியிடவில்லை.

- Advertisement -

சமீப காலமாகவே ஒயிட் பால் கிரிக்கெட்டில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சனை சேர்க்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வந்த வேளையில் இப்படி திடீரென ரிஷப் பண்ட் வெளியேற்றப்பட்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : IND vs BAN : தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை அசிங்கமாக திட்டினாரா ரோஹித்? – வைரலாகும் வீடியோ

அதேபோன்று இந்த முதலாவது போட்டியில் ஆல் ரவுண்டான அக்சர் பட்டேலும் தேர்வு செய்யப்படவில்லை அதற்கான சரியான காரணமும் வெளி வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement