விபத்தால் ஏற்பட்ட பரிதாபம். கரியரில் பெரிய பின்னடைவை சந்திக்கவுள்ள ரிஷப் பண்ட் – இது வேறயா?

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் 30-ம் தேதி நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற அந்த விபத்தில் கார் தீ பிடித்து எரிந்ததன் பின்னர் படுகாயத்துடன் தப்பித்த ரிஷப் பண்ட் அங்கிருந்தவர்களின் உதவியின் மூலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன் பின்னர் மும்பைக்கு அழைத்து வரப்பட்ட அவருக்கு மேலும் சில அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது.

Rishabh-Pant-4

- Advertisement -

இந்நிலையில் ரிஷப் பண்ட் அடுத்ததாக வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சை பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கடந்து சில தினங்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் ரிஷப் பண்ட்டிற்கு இன்னும் ஆறு வாரங்கள் கழித்து மற்றொரு அறுவை சிகிச்சை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ரிஷப் பண்ட் இந்த காயத்திலிருந்து முழுவதுமாக குணமடைந்து மீண்டும் முழு உடற்தகுதியை அடைய ஒரு வருடம் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் ரிஷப் பண்ட் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் பெரும்பாலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு இல்லை தெரிகிறது.

Rishabh Pant

அதன் காரணமாக எதிர்வரும் 16-ஆவது ஐபிஎல் தொடரையும் அவர் முற்றிலுமாக தவறவிடுவார் என்று ஏற்கனவே சவுரவ் கங்குலி உறுதி செய்திருந்தார். இந்நிலையில் தற்போது அவருக்கு இன்னும் ஆறு வாரங்கள் கழித்து நடைபெற இருக்கும் அறுவை சிகிச்சைக்கு பிறகு அதிலிருந்து மீண்டு வர இன்னும் சில மாதங்கள் பிடிக்கும் என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர் அக்டோபர் நவம்பர் மாதங்களில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரையும் அவர் இழக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க : அவரை டீம்ல செலக்ட் பண்ணாம ஏமாத்திட்டாங்க. அவருக்கு என்ன குறை – ஆகாஷ் சோப்ரா ஆதங்கம்

இதனால் கிட்டத்தட்ட ஓர் ஆண்டு அவர் எவ்வித போட்டிகளிலும் விளையாட முடியாத நிலையே ஏற்படும் என்பதனால் அவர் குறித்து வெளியான இந்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே ஒரு விபத்து அவரது கரியரின் ஒரு ஆண்டை முழுவதுமாக பாதித்துள்ளது பெரிய அவருக்கு பெரிய பின்னடைவை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement