அவரை டீம்ல செலக்ட் பண்ணாம ஏமாத்திட்டாங்க. அவருக்கு என்ன குறை – ஆகாஷ் சோப்ரா ஆதங்கம்

Chopra
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்றுடன் முடிவடையும் வேளையில் அடுத்ததாக இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அந்த நியூஸிலாந்து தொடரை முடித்த கையோடு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது இந்தியாவிலேயே நடைபெற இருக்கிறது.

Yuzvendra Chahal

- Advertisement -

இப்படி அடுத்த அடுத்த தொடர்கள் இந்திய அணிக்கு இருப்பதினால் தற்போது இந்த தொடர்களில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலையும் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதில் சில வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும், சில வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படும் உள்ளது தற்போது இணையத்தில் பெரிய அளவில் பேசப்படும் பொருளாக மாறி உள்ளது.

அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். அந்த டெஸ்ட் அணியில் இந்திய அணியின் இளம் வீரரான சர்பராஸ் கான் தேர்வு செய்யப்படாதது பெருமளவு விமர்சனத்தை பெற்றுள்ளது. ஏனெனில் டெஸ்ட் தொடரில் விளையாட வேண்டுமெனில் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியிருக்க வேண்டியது அவசியம்.

Sarfaraz-khan-2

அந்த வகையில் கடந்த 2021-22 ரஞ்சி சீசனில் 982 ரன்களை குவித்ததோடு நடப்பு ரஞ்சித் தொடரிலும் 431 ரன்கள் குவித்துள்ளார். இப்படி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் அவருக்கு பதிலாக டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி வரும் சூரியகுமார் யாதவிற்கு டெஸ்ட் அணியில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இப்படி சூரியகுமார் யாதவுக்கு இடம் கொடுக்கப்பட்டு சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது தற்போது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரான ஆகாஷ் சோப்ரா கூறுகையில் : சர்பராஸ் கான் பெயர் ஏன் டெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை என்பது எனக்கு தெரியவில்லை. நிச்சயமாக அவர் ஏமாற்றப்பட்டு விட்டதாக நினைத்திருப்பார். ஏனெனில் உள்ளூர் கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரில் அவரை தவிர வேறு யாரும் சிறப்பாக விளையாடவில்லை.

இதையும் படிங்க : வீடியோ : கேட்ச்சுக்கு சிக்ஸர் வழங்கிய அம்பயர் – பிக்பேஷ் தொடரில் மற்றுமொரு சம்பவத்தால் ரசிகர்கள் அதிருப்தி

என்னை பொறுத்தவரை அவர் தேர்வு செய்யப்படாதது எனக்கு கவலை அளிக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை சூரியகுமார் யாதவா? அல்லது சர்பராஸ் கானா? என்று கேட்டால் நான் நிச்சயம் சர்பராஸ் தான் என்று கூறுவேன். ஏனெனில் 80 சதவீதத்திற்கும் மேல் சராசரி வைத்திருக்கும் அவர் கட்டாயம் டெஸ்ட் அணியில் வாய்ப்பினை பெற தகுதியானவர் என ஆகாஷ் சோப்ரா தனது ஆதங்கத்தை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement