மீண்டும் ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு திரும்ப இருக்கும் நட்சத்திர வீரர் – ரசிகர்களின் ஆசை நிறைவேறியது

INDvsENG
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது இந்திய அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரு போட்டிகளில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முடிவடைந்த நிலையில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரை சமநிலை வகிக்கின்றன. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளும் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மோதிரா மைதானத்தில் நடைபெற உள்ளது.

- Advertisement -

அதிலும் வரும் 24ஆம் தேதி அன்று நடக்க உள்ள டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அகமதாபாத் டெஸ்ட் போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் இவ்வேளையில் அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ தங்களது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் சற்றுமுன் வெளியிட்டது.

இதோ கடைசி 2 போட்டிகளுக்கான இந்திய அணி : விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணைக்கேப்டன்), ரோகித் ஷர்மா, மயங்க் அகர்வால், சுப்மன் கில், புஜாரா, கே.எல். ராகுல், ஹர்திக் பாண்ட்யா, பண்ட் (விக்கெட் கீப்பர்), சாஹா (விக்கெட் கீப்பர்), அஷ்வின், குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், இஷாந்த் ஷர்மா, பும்ரா, முகமது சிராஜ் ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

Pant

இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான அணியும் விரைவில் தேர்வு செய்யப்பட இருக்கிறது. அந்த அணியில் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இடம் பிடிப்பார் என்ற அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இந்திய அணியின் மூன்று வித அணிகளிலும் இடம் பிடித்து விளையாடி வந்த பன்ட் மோசமான ஆட்டம் காரணமாக ஒருநாள் மற்றும் டி20 அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

- Advertisement -

அவருக்கு பதிலாக ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பண்ட் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடரிலும் தனது அதிரடி வெளிப்படுத்தினார். இதன் மூலம் மீண்டும் பார்முக்கு திரும்பி தனது திறமையை நிரூபித்துள்ளார். எனவே டி20 மற்றும் ஒருநாள் அணிகளில் இணைக்க தேர்வுக்குழு ஆர்வம் காட்டுவதாகவும் இதுகுறித்த அறிவிப்பு பிசிசிஐ யிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Pant-4

ஏற்கனவே ரிஷப் பண்ட்டின் சிறப்பான ஆட்டத்தினால் ரசிகர்கள் அவரை மீண்டும் இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 அணியில் இணைக்குமாறு தங்களது கோரிக்கைகளை முன்வைத்து வர தற்போது இந்த தகவல் வெளியாகியுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement