- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அதுக்காக பண்ட், பும்ரா என்கிட்ட மன்னிப்பு கேட்டாங்க.. அவங்க வேணும்ன்னு பண்ணல.. பவுமா பேட்டி

இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 3 விதமான தொடர்களில் விளையாடியது. அதில் முதலாவதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 25 வருடங்கள் கழித்து 2 – 0 (2) என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா அணியிடம் இந்தியா தோல்வியைச் சந்தித்தது. அதற்கு அடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் வென்ற இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுத்தது.

அதோடு நிற்காத இந்திய அணி அதற்கடுத்ததாக நடைபெற்ற டி20 தொடரையும் 3 – 1 (5) என்ற கணக்கில் வென்று தென்னாப்பிரிக்காவுக்கு இரட்டை பதிலடி கொடுத்தது. முன்னதாக அந்தச் சுற்றுப்பயணத்தில் தென்னாப்பிரிக்கா கேப்டன் தெம்பா பவுமாவை இந்திய வீரர்களால் கிண்டலடிக்கப்பட்டது சர்ச்சையானது. அதாவது கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் போட்டியில் பவுமா பேட்டிங் செய்து கொண்டிருந்தார்.

- Advertisement -

வேணும்ன்னு சொல்லல:

அப்போது ஓவர் மாற்றும் இடைவெளியில் ஜஸ்ப்ரித் பும்ரா மாற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் பவுமாவை “குட்டையன்” என்று குறிப்பிட்டு பேசியது ஸ்டம்ப் மைக்கில் பதிவானது. அதைப் பார்த்த எதிரணி ரசிகர்கள் இந்திய வீரர்கள் பவுமாவை உடலை வைத்து இப்படி கிண்டலடிக்கலாமா? என்று விமர்சித்தார்கள். உண்மையில் அவரை நேரடியாக பார்த்து பண்ட், பும்ரா எந்த வார்த்தையும் சொல்லவில்லை.

தங்களுக்குள் ஹிந்தி மொழியில் பேசிக்கொள்ளும் போது அவர்கள் எதர்ச்சியாக குட்டையன் என்ற வார்த்தையை பிரயோகித்தனர். ஆனால் அது ஸ்டம்ப் மைக்கில் பதிவாகி வெளியே வந்ததால் பும்ரா மற்றும் ரிஷப் பண்ட் விமர்சனங்களை சந்தித்தார்கள். இந்நிலையில் தெரியாமல் சொன்ன அந்த வார்த்தைக்காக ரிஷப் பண்ட், ஜஸ்ப்ரித் பும்ரா தம்மிடம் மன்னிப்பு கேட்டதாக தெம்பா பவுமா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மன்னிப்பு கேட்டாங்க:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “என்னைப் பற்றி அவர்கள் அவர்களுடைய மொழியில் எதிர்ச்சியாக ஏதோ சொன்னார்கள் என்பது எனக்குத் தெரியும். நாளின் இறுதியில் ஜஸ்ப்ரித் பும்ரா, ரிஷப் பண்ட் ஆகிய 2 சீனியர் வீரர்களும் என்னிடம் வந்து மன்னிப்பு கேட்டார்கள். அந்த மன்னிப்பு கேட்கப்பட்ட போது அதைப்பற்றி எனக்கு தெளிவான விளக்கம் தெரியவில்லை. அதனால் எங்களுடைய அணியின் மேனேஜரிடம் அது பற்றிய விளக்கத்தை கேட்க வேண்டியிருந்தது”

இதையும் படிங்க: டி20 போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் புதிய உச்சம் தொட்ட திலக் வர்மா – விவரம் இதோ

“களத்தில் நடப்பது களத்திலேயே இருக்க வேண்டும். அங்கே சொல்லப்படுவதை நீங்கள் மறந்து விட வேண்டும். வேண்டுமானால் அதை நீங்கள் ஊக்கத்துக்குத் தேவையான எரிபொருளாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அங்கே எந்த வெறுப்பும் இருக்கக்கூடாது” என்று கூறினார். சொல்லப்போனால் கௌகாத்தி போட்டியின் முடிவில் ஜஸ்ப்ரித் பும்ரா தாமாக சென்று பவுமா தோளில் கைபோட்டு மன்னிப்பு கேட்கும் வகையில் பேசியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -