இப்போவும் சொல்றேன், ஓவர் வெய்ட்டான அவர் மட்டும் உடம்பை குறைச்சா பெரிய அளவுக்கு வருவாரு – சல்மான் பட் அதிரடி

Butt
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடி வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் கிரிக்கெட் போட்டியில் 513 ரன்களை துரத்தி வரும் வங்கதேசம் 3வது நாள் முடிவில் 471 ரன்கள் பின்தங்கியுள்ளதால் இந்தியா வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இபோட்டியில் 90, 102* என புஜாரா பெரிய ரன்களை குவித்து தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த நிலையில் முதல் இன்னிங்ஸில் 48/3 என இந்தியா தடுமாறிய போது களமிறங்கிய ரிஷப் பண்ட் தமக்கே உரித்தான அதிரடி பாணியில் 5 பவுண்டரி 2 சிக்சரை பறக்க விட்டு 46 (45) ரன்களை குவித்து சரிவை சரி செய்ய உதவினார்.

pant 1

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டில் இது போல அறிமுகமான 2017 முதலே அதிரடி அணுகு முறையை பின்பற்றி எதிரணிகளை பந்தாடும் அவர் தோனியை மிஞ்சி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா போன்ற சவாலான வெளிநாடுகளில் சதமடித்த முதல் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பராக சாதனை படைத்து காபா போன்ற சில மறக்க முடியாத வரலாற்று வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்துள்ளார். அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தி தனக்கென்று நிலையான இடத்தை பிடித்துள்ள அவர் அதிரடியாக விளையாட வேண்டிய வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அப்படியே நேர்மாறாக சொதப்பலாக செயல்பட்டு நிறைய விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.

உடம்பை குறைங்க:

குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு சதம் மட்டும் அடித்துள்ள அவர் அதிரடி காட்ட வேண்டிய டி20 கிரிக்கெட்டில் 68 போட்டிகள் என்ற அதிகப்படியான வாய்ப்பை பெற்றும் எப்போதுமே ரசிகர்களின் மனதில் நிற்கும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டதில்லை. இத்தனைக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடி காட்டுவதால் பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி வெற்றிகரமாக செயல்படுவார் என்பதற்காக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கும் வாய்ப்பை அணி நிர்வாகம் அவருக்கு கொடுத்தது.

Rishabh Pant

ஆனால் அதிலும் சொதப்பிய அவர் 1 – 7 வரை வாய்ப்பு பெற்ற அனைத்து பேட்டிங் இடங்களிலும் சொதப்பலாக செயல்பட்டு விமர்சனங்களை தாங்கி நிற்கிறார். இந்நிலையில் இந்திய அணியின் வருங்கால விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டனாக பிசிசிஐ வளர்க்க நினைக்கும் ரிசப் பண்ட் தமது ஃபிட்னஸ் விஷயத்தில் கவனம் செலுத்தி உடம்பை குறைத்தால் இன்னும் வெற்றிகரமாக செயல்படுவார் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் கூறியுள்ளார். சமீப காலங்களாகவே இதை தெரிவித்து வரும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ரிஷப் பண்ட் தாம் விரும்பும் ஸ்டைலில் விளையாடுகிறார். ஆனால் அதற்காக ஏதோ ஒரு புதிய முயற்சியை கையிலெடுத்து ஆட்டமிழந்து விட்டார். குறிப்பாக முதல் டெஸ்டில் அவர் அவுட்டான விதம் மிகவும் வேடிக்கையானது. ஏனெனில் பந்து ஸ்டம்ப்பில் படுவதற்கு முன்பாக அவரது பேட்டிலும் காலிலும் பட்டது. நான் எப்போதுமே அவருடைய ஃபிட்னஸ் பற்றி தொடர்ந்து பேசி வருகிறேன்”

Butt

“ஏனெனில் அவரிடம் நாம் நினைத்துப் பார்க்க முடியாத ஏராளமான புதிய ஷாட்கள் உள்ளது. ஆனால் அவர் மட்டும் இன்னும் ஃபிட்டாக இருந்தால் அந்த ஷாட்களை அவரால் எளிதாக அடிக்க முடியும். நிச்சயமாக அவர் தற்சமயத்தில் அதிக எடையுடன் இருக்கிறார். அதனாலேயே அவரால் மிகவும் சுறுசுறுப்பாக இருக்க முடிவதில்லை. எனவே உடற்தகுதி அடிப்படையில் அவர் முன்னேற வேண்டிய நிலையில் இருக்கிறார்” என்று கூறினார்.

இதையும் படிங்க:  ஆஸ்திரேலியாவில் அடித்த இடியால் இந்தியாவில் ஆர்சிபி’யை கலாய்த்து தள்ளும் ரசிகர்கள் – விதவிதமான ரியாக்சன்கள் உள்ளே

இந்த காலத்து நவீன கிரிக்கெட்டில் ஃபிட்னஸ் என்பது பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய 3 துறைகளிலும் சிறந்து விளங்குவதற்கு இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக போட்டி மிகுந்த இந்திய அணியில் சிறந்து விளங்குவதற்கு நல்ல ஃபிட்னஸ் அவசியமாகும் நிலையில் அவர் கூறுவது போல ஏற்கனவே சற்று உயரம் குறைவாக இருக்கும் ரிசப் பண்ட் உடல் எடையில் கவனம் செலுத்தினால் இன்னும் சிறந்து விளங்குவதற்கு வாய்ப்பு ஏற்படலாம்.

Advertisement