அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியா – இந்திய கிரிக்கெட் அணிகள் மோதி வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 6ஆம் தேதி துவங்கியது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 180 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக நித்திஷ் ரெட்டி 42, சுப்மன் கில் 31, ராகுல் 37 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை எடுத்தார்.
அதை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 86-1 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. கவாஜா 13 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் களத்தில் நாதன் மெக்ஸ்வீனி 38*, லபுஸ்ஷேன் 20* ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்கள். அதனால் இரண்டாவது நாளில் சிறப்பாக பந்து வீச வேண்டிய நிலையில் இந்தியா உள்ளது.
ஆஸ்திரேலியாவில் ரிஷப் பண்ட்:
முன்னதாக இப்போட்டியில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஜஸ்டின் லாங்கர் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். அதில் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்ய வந்த போது அவர் பேசியது பின்வருமாறு. “ரிஷப் பண்ட் கடந்த இரண்டு தொடர்களில் என்னை மிகவும் பேய் போல ஆட்டி விட்டார். தற்போது ஒரு வாரத்திற்கு முன்பாக அவர் எனக்கு மிகவும் பிடித்த நபராக மாறியுள்ளார் என்று நம்புகிறேன்”
“ஏனெனில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி அவரை வாங்கியுள்ளது. அதனால் தற்போது அவர் என்னுடைய எதிரி அல்ல நண்பன்” என்று கூறினார். அதாவது 2018 – 19, 2020 – 21 ஆகிய பார்டர் – கவாஸ்கர் தொடர்களை ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக இந்தியா வென்று சாதனை படைத்தது. அந்த தொடர்களில் ஆஸ்திரேலியா அணியின் பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் செயல்பட்டார்.
நண்பனாக ரிஷப்:
மறுபுறம் ரிஷப் பண்ட் அந்த இரண்டு தொடர்களிலும் சிறப்பாக விளையாடி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். குறிப்பாக 2021 காபா டெஸ்ட் போட்டியில் 89* ரன்கள் குவித்த அவர் இந்தியாவின் வெற்றிக்கு கருப்பு குதிரையாக செயல்பட்டார். அந்த வகையில் ஆஸ்திரேலியா அணி தம்முடைய வழிகாட்டுதலில் இந்தியாவிடம் முதல் முறையாக தோற்க ரிஷப் பண்ட் எதிரியாக முக்கிய காரணமாக இருந்ததாக லாங்கர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இந்த 2 காரணத்தால் தான் 2வது டெஸ்டில்.. சுந்தருக்கு பதில் அஸ்வின் தேர்வானார்.. கோச் ரியான் பேட்டி
ஆனால் தற்போது ஜஸ்டின் லாங்கர் லக்னோ ஐபிஎல் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். எனவே தம்முடைய தலைமையில் தற்போது நண்பராக ரிஷப் பண்ட் லக்னோ அணியில் விளையாட உள்ளதாக லாங்கர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அந்த வகையில் ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியாவில் மிகச் சிறந்த வீரராக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.