அவங்களையே அடிச்சு நொறுக்கிய ரிஷப் பண்ட் மிராக்கிள் பையன்.. பாகிஸ்தானில் கவலைப்பட்டோம்.. வாசிம் அக்ரம்

Wasim Akram
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் கார் விபத்தில் சந்தித்த காயத்திலிருந்து மீண்டும் குணமடைந்து விளையாடுவது பலரையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. குறிப்பாக 2024 ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக 400க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்த அவர் டி20 உலகக் கோப்பையிலும் விளையாடி இந்தியா 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார்.

அப்படியே வங்கதேசத்துக்கு எதிராக சென்னையில் 634 நாட்கள் கழித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் களமிறங்கிய ரிஷப் பண்ட் சதமடித்து 109 ரன்கள் விளாசி கம்பேக் கொடுத்தார். அதையும் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற தோனியின் சாதனையும் அவர் சமன் செய்தார். இந்நிலையில் ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜேம்ஸ் ஆண்டர்சன், பட் கமின்ஸ் போன்ற தரமான பவுலர்களை அடித்து நொறுக்கியவர் என்று வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மிராக்கிள் ரிஷப் பண்ட்:

அப்படிப்பட்ட அவர் காயத்தை சந்தித்த போது தம்மைப் போன்றவர்கள் கவலைப்பட்டதாகவும் வாசிம் அக்ரம் கூறியுள்ளார். இருப்பினும் அதிலிருந்து மீண்டு வந்து கம்பேக் கொடுத்துள்ள ரிஷப் பண்ட் மிராக்கிள் குழந்தை என்று அவர் பாராட்டியுள்ளார். அவருடைய இந்த கதை பல இளம் வீரர்களுக்கும் அடுத்த தலைமுறைக்கும் எடுத்துக்காட்டாக இருக்கும் என்றும் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ரிஷப் பண்ட் செயல்பாடுகளை பாருங்கள். சோகத்திலிருந்து மீண்டும் வந்த அவர் தன்னை சூப்பர் மேன் என்பதை காட்டி மிராக்கிள் நிகழ்த்தியுள்ளார். அவருக்கு விபத்து நேர்ந்த போது பாகிஸ்தானில் நாங்கள் கவலைப்பட்டோம். அதைப் பற்றி நான் ட்விட்டரில் பகிர்ந்தேன். அதற்கு முன்பாக அவர் ஆஸ்திரேலியாவில் சதமடித்தார்”

- Advertisement -

வாசிம் அக்ரம் மகிழ்ச்சி:

“இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாக பேட்டிங் செய்த அவர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு எதிராக ரிவர் ஸ்விப் அடித்தார். பட் கமின்ஸ்க்கு எதிராகவும் அதை அவர் செய்த ஸ்பெஷல். மோசமான விபத்திலிருந்து தற்போது கம்பேக் கொடுத்துள்ள இந்தப் பையன் கண்டிப்பாக மனதளவில் வலுவானவராக இருக்க வேண்டும். அவருடைய இந்த கதை வரும் தலைமுறைகளில் உள்ள இளைஞர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கக் கூடியதாக இருக்கும்”

இதையும் படிங்க: கோஹினூர் வைரம் பென்ஸ் மாதிரியான பும்ரா.. அப்படி சொன்னா என்ன? கோலி ரசிகர்களுக்கு அஸ்வின் பதிலடி

“ரிஷப் பண்ட் போல உங்களாலும் கம்பேக் கொடுக்க முடியும். முதலில் ஐபிஎல் தொடரில் கம்பேக் கொடுத்த அவர் 446 ரன்களை 155 ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்தார். அவர் அதிசயக் குழந்தை” என்று மகிழ்ச்சியுடன் கூறினார். இதைத்தொடர்ந்து ரிஷப் பண்ட் செப்டம்பர் 27ஆம் தேதி துவங்கும் இரண்டாவது வங்கதேச டெஸ்ட் போட்டியில் மீண்டும் களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement