மும்பை அணிக்கு எதிராக ஹெலிகாப்டர் சிக்ஸ் அடித்த ரிஷப் பண்ட் – வீடியோ

pant-2
- Advertisement -

நேற்றைய மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியில் டெல்லி அணி வீரரான ரிஷப் பண்ட் பும்ரா வீசிய 18 ஆவது ஓவரில் தோனி அடிக்கும் ஹெலிகாப்டர் ஷாட் போன்றே யார்க்கர் பந்தை லெக்சைடில் சிக்ஸ் அடித்தார். இந்த சிக்ஸரை பார்த்து பும்ரா திகைத்து நின்றார். இதோ அந்த வீடியோ :

- Advertisement -

டெல்லி அணியின் இளம் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனான பண்ட் ஏற்கனவே இந்திய அணியில் இடம் பிடித்துவிட்டார். மேலும், உலகக்கோப்பை அணியிலும் அவருக்கு நிச்சயம் வாய்ப்பு உண்டு. தோனிக்கு அடுத்து இந்தியாவின் அடுத்த கீப்பிங் பேட்ஸ்மேன் பண்ட் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய போட்டியில் அவரது அதிரடியை டெல்லி அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

நேற்று இரவு 8 மணிக்கு நடந்த போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி பண்ட்டின் அதிரடி ஆட்டம் மூலம் 20 ஓவர்களில் 213 ரன்களை குவித்தது. இதனால், 214 ரன்கள் மும்பை அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

Delhi

அடுத்து ஆடிய மும்பை அணி 19.2 ஓவர்களில் 176 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. டெல்லி அணி சார்பில் ரபாடா சிறப்பாக பந்துவீசி 23 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். 27 பந்துகளில் 78 ரன்களை அடித்த டெல்லி அணி வீரர் பண்ட் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Advertisement