வெளிநாடு மட்டுமல்ல இந்தியாவிலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சூப்பர் ரெக்கார்டு வைத்திருக்கும் பண்ட் – விவரம் இதோ

Pant
- Advertisement -

கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் அதன்பின்னர் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக எவ்வித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்து வந்தார். அதன் பின்னர் இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் கம்பேக் கொடுத்த அவர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவே தொடர்ச்சியாக தற்போது இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார்.

இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தும் ரிஷப் பண்ட் :

இரண்டு ஆண்டுகள் கழித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்கதேச அணிக்கு எதிராக கம்பேக் கொடுத்த அவர் அந்த தொடரிலேயே சதம் அடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகியதில் இருந்து இதுவரை மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அதிரடியாக விளையாடி வருகிறார்.

- Advertisement -

ரிஷப் பண்ட் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற மைதானங்களிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். இந்நிலையில் வெளிநாட்டில் மட்டுமல்ல உள்நாட்டிலும் தான் ஒரு சூப்பர் பிளேயர் என்பதை அவர் தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரின் மூலம் நிரூபித்துள்ளார்.

ஏனெனில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 99 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த அவர் இந்திய மண்ணில் மட்டும் இதுவரை 17 இன்னிங்ஸ்களில் 919 ரன்களை குவித்திருக்கிறார். அதில் இரண்டு சதங்கள் மற்றும் ஏழு அரைசதங்கள் அடங்கும்.

- Advertisement -

அதோடு இதில் குறிப்பிட வேண்டிய விடயம் யாதெனில் : இந்திய மண்ணில் மட்டும் இதுவரை அவர் ஐந்து முறை 90 ரன்களுக்கு மேல் சென்று ஆட்டம் இழந்துள்ளார். அதேபோன்று ஒட்டுமொத்தமாக அவர் ஏழு முறை 90 ரன்களுக்கு மேல் ஆட்டமிழந்துள்ளார். தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 6 சதங்கள் விளாசியிருக்கும் அவர் இந்த தவறிப்போன ஏழு சதங்களை அடித்து இருந்தால் 13 சதங்கள் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக மெகா சாதனையை நிகழ்த்திருப்பார்.

இதையும் படிங்க : விராட் கோலி விக்கெட் ஸ்பெஷல்.. இது நடக்கலன்னா இந்தியாவின் தோல்வியை நிறுத்த முடியாது.. வில்லியம் பேட்டி

ஆனாலும் தற்போது வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 2551 ரன்கள் எடுத்திருக்கும் அவர் இன்னும் பல ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடுவார் என்பதால் ஏகப்பட்ட சாதனைகளை டெஸ்ட் கிரிக்கெட்டில் நிகழ்த்துவார் என்பதில் சந்தேகம் இல்லை. இந்திய மண்ணில் அவரது பேட்டிங் சராசரி 61 ஆகவும், வெளிநாட்டு மண்ணில் அவரது பேட்டிங் சராசரி 39.6 ஆகவும் சிறப்பான நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement