காயத்தையும் தாண்டி இந்தியாவுக்காக போராடிய ரிஷப் பண்ட்.. ஐசிசி தரவரிசையில் கிங் கோலியை முந்தி அபாரம்

RIshabh Pant
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அந்தத் தொடரின் முதல் போட்டியில் வென்ற நியூசிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கிறது. மறுபுறம் 36 வருடத்திற்கு பின் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டியில் தோற்ற இந்தியா பின்னடைவை சந்தித்துள்ளது.

முன்னதாக காயத்தில் இருந்து குணமடைந்து விளையாடும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கடந்த வங்கதேச டெஸ்ட் தொடரில் சதமடித்து கம்பேக் கொடுத்தார். அந்த நிலையில் இத்தொடரின் முதல் போட்டியில் முழங்காலில் காயத்தை சந்தித்த அவர் மேற்கொண்டு விளையாட மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் 46க்கு ஆல் அவுட்டான இந்தியா தோல்வியை தவிர்க்க போராடியது.

- Advertisement -

ரிஷப் பண்ட் முன்னேற்றம்:

அப்போது இரண்டாவது இன்னிங்சில் காயத்தையும் தாண்டி ரிஷப் பண்ட் இந்தியாவுக்காக விளையாடினார். அந்த வாய்ப்பில் அபாரமாக விளையாடிய அவர் சதத்தை நழுவ விட்டாலும் 99 ரன்கள் குவித்து குறைந்தபட்சம் இந்தியாவை இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து காப்பாற்றினார். இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

அதில் ரிஷப் பண்ட் டாப் 10 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். குறிப்பாக பெங்களூரு டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடிய அவர் 3 இடங்கள் உயர்ந்து விராட் கோலியை முந்தி உலகின் நம்பர் 6வது பேட்ஸ்மேனாக முன்னேறி சாதனை படைத்துள்ளார். மறுபுறம் விராட் கோலி எட்டாவது இடத்திற்கு சரிந்துள்ள நிலையில் ரோஹித் சர்மா 16, சுப்மன் கில் 20வது இடத்திற்கு சரிந்துள்ளனர்.

- Advertisement -

தொடரும் இந்திய வீரர்கள்:

இளம் வீரர் ஜெய்ஸ்வால் தொடர்ந்து நான்காவது இடத்தில் ஜொலித்து வருகிறார். அதே போல டாப் 10 பவுலர்களுக்கான தரவரிசையில் தொடர்ந்து ஜஸ்ப்ரித் பும்ரா, ரவிச்சந்திரன் அஸ்வின் 2 இடங்களை பிடித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகிறார்கள். ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து ஏழாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். டாப் 10 ஆல் ரவுண்டர்களுக்கான பட்டியலில் ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் முதலிரண்டு இடத்தை தொடர்ந்து தங்கள் வசம் வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: வெறும் 4 போட்டிகளில் மட்டுமே விளையாடிய மாயங்க் யாதவிற்கு 14 கோடி – எதற்காக தெரியுமா?

அக்சர் படேல் 7வது இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளார். டாப் 10 அணிகள் தரவரிசையில் ஆஸ்திரேலியா தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் அணியாக இருக்கிறது. மறுபுறம் முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்தியா தொடர்ந்து இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 24ஆம் தேதி புனே நகரில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement