
கடந்த 2025-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட்டை 27 கோடி ரூபாய் என்கிற மிகப்பெரிய விலைக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியானது ஏலத்தில் எடுத்து அவரை கேப்டனாகவும் நியமித்தது. ஆனால் அவரது தலைமையில் அந்த ஆண்டு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியானது மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியது. அதோடு தனிப்பட்ட வகையிலும் ரிஷப் பண்ட் தனது மோசமான பேட்டிங் பார்மை வெளிப்படுத்தியிருந்தார்.
அதனை தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2096 ஐ.பி.எல் தொடரிலும் படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய லக்னோ அணியானது எட்டாம் இடத்தை பிடித்து வெளியேறியது. இந்த ஐ.பி.எல் தொடரிலும் 14 போட்டிகளில் விளையாடிய ரிஷப் பண்ட் ஒரே ஒரு அரைசதத்துடன் 312 ரன்கள் மட்டுமே குவித்து ஏமாற்றம் அளித்தார். இப்படி அடுத்த அடுத்த ஆண்டுகளில் கேப்டன்சி மற்றும் பேட்டிங் என இரண்டிலும் சொதப்பிய அவரை லக்னோ அணியின் நிர்வாகம் இத்துடன் வெளியேற்ற நினைத்தது.
இப்படி லக்னோ அணியின் நிர்வாகம் முடிவெடுக்கும் முன்னரே ரிஷப் பண்ட்டும் கேப்டன் பதவியில் இருந்து விலகி தான் வேறு அணிக்கு செல்ல தயாராகினார். அதன் காரணமாக ரிஷப் பண்டை டிரேடிங் முறையில் தங்களது அணிக்குள் கொண்டு வர ஒரு சில அணிகள் முயற்சி செய்தன. இறுதியில் ஏற்கனவே அவர் விளையாடியிருந்த டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது 12 கோடி விலை குறைத்து 15 கோடிக்கு தங்களது அணியில் டிரேடிங் செய்து கொண்டிருந்தது.
அதே வேளையில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் இருந்த குல்தீப் யாதவ் 13.5 கோடி என்கிற விலைக்கு லக்னோ அணிக்கு இடம் மாறியுள்ளார். இந்த டிரேடிங் கடந்து சில தினங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இவ்வேளையில் லக்னோ அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் இணைந்துள்ள ரிஷப் பண்ட் லக்னோ அணி வெளியிட்டுள்ள ஒரு பதிவிற்கு தனது ரிப்ளையை மூன்றே வார்த்தைகள் மூலம் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு இந்த வாய்ப்பை வழங்கியே ஆக வேண்டும் – அஷ்வின் கருத்து
அந்த வகையில் ரிஷப் பண்ட் செய்த செயல் யாதெனில் : லக்னோ அணியின் நிர்வாகம் தங்களது சமூக வலைதள பக்கத்தில் ரிஷப் பணட்டை வாழ்த்தும் விதமாக “நன்றி ரிஷப்” என்று குறிப்பிட்டிருந்தது. அதற்கு பதிலளித்துள்ள ரிஷப் பண்ட் “தேங்க் யூ டீம்” (Thank You Team) என மூன்றே வார்த்தைகளில் தனது ரிப்ளையை அளித்துள்ளார்.