இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அதன் பிறகு கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் சர்வதேச போட்டிகள் மட்டுமின்றி எவ்வித போட்டிகளிலும் விளையாடாமல் இருந்த அவர் இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2024 ஐ.பி.எல் தொடரில் தான் கம்பேக் கொடுத்தார்.
ரிஷப் பண்டிற்கு ஏற்பட்டுள்ள காயம் :
அப்படி தான் கம்பேக் கொடுத்த தொடரிலேயே பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் அசத்தலாக செயல்பட்டதால் அவர் டி20 உலக கோப்பை தொடரை வென்ற இந்திய அணியிலும் இடம் பெற்றிருந்தார். அதனை தொடர்ந்து இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பிடித்து விளையாடியிருந்தார்.
அதன் பின்னர் வங்கதேச அணிக்கு எதிரான அண்மையில் நடைபெற்று முடிந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மீண்டும் டெஸ்ட் போட்டிகளுக்கு திரும்பிய அவர் இரண்டாவது போட்டியின் பொது சதம் அடித்தும் அசத்தியிருந்தார்.
பொதுவாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரிஷப் பண்ட் இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பராகவே திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விக்கெட் கீப்பராக தேர்வாகியிருந்த ரிஷப் பண்ட் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியிலும் பிளேயிங் லெவனில் இடம்பிடித்திருந்தார்.
அப்படி இன்று நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் விளையாடிய அவர் பேட்டிங்கில் ஓரளவு சுதாரித்து விளையாடினார் என்ற கூறலாம். ஏனெனில் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 46 ரன்களுக்கு ஆல் அவுட்டாக இந்திய அணி சார்பாக ரிஷப் பண்ட் தான் அதிகபட்சமாக 20 ரன்கள் குவித்து ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இதையும் படிங்க : யார் பேச்சையும் கேக்காம இப்படியா பண்ணுவீங்க.. தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொண்ட – ரோஹித் சர்மா
இந்நிலையில் இந்த போட்டியின் வீரர்கள் மைதானத்தில் பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது இந்திய பவுலர் ஒருவர் பந்துவீச்சு பயிற்சி ஈடுபட்ட வேளையில் அதை பிடிக்க தவறிய அவர் முட்டியில் அடி வாங்கினார். இதன் காரணமாக வலியால் துடித்த அவர் மைதானத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். அதன் பிறகு அவருக்கு பதிலாக துருவ் ஜூரேல் கீப்பிங் பணியை மேற்கொண்டு வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச் சிறப்பான வீரராக பார்க்கப்படும் அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் தீவிரமடைந்தால் அது நிச்சயம் இந்திய அணிக்கு பின்னடைவு தான்.



