- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இன்னும் டெஸ்ட் சீரியஸ்ஸே ஆரம்பிக்கல.. அதுக்குள்ள இப்படியா? காயத்தில் சிக்கிய – இந்திய நட்சத்திர வீரர்

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்ததாக இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட மிகப்பெரிய டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது இந்திய அணியானது இங்கிலாந்து நாட்டுக்கு சென்று பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறது.

இந்திய வீரருக்கு ஏற்பட்டுள்ள காயம் : வெளியான தகவல்

இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, ரவிச்சந்திரன்அஸ்வின் போன்றோர் இல்லாததால் இந்த தொடரை இந்திய அணி எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறது? என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

- Advertisement -

அதோடு முற்றிலும் இளம் வீரர்களை கொண்ட இந்த இந்திய அணி இந்த தொடரை எவ்வாறு சமாளித்து வெற்றி பெறப்போகிறது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்நிலையில் தற்போது இங்கிலாந்து நாட்டில் பயிற்சி செய்து வரும் இந்திய அணியில் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் காயமடைந்துள்ளதாக ஒரு தகவல் வெளியாயுள்ளது.

அந்த வகையில் நடைபெற்று வரும் பயிற்சியில் பங்கேற்று விளையாடி வந்த ரிஷப் பண்ட் வலைப்பயிற்சியின் போது விரலில் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் எதிர்வரும் இந்த டெஸ்ட் தொடரில் விளையாட முடியாமல் போனால் அது இந்திய அணிக்கு மிகப்பெரிய பாதிப்பாகவும் மாறும் என்று தெரிகிறது.

- Advertisement -

ஆனால் ரிஷப் பண்ட்க்கு காயம் ஏற்பட்ட உடனேயே இந்திய அணியின் மருத்துவக்குழுவை சேர்ந்த டாக்டர் அவருக்கு விரைவில் ஐஸ் பேக் வைத்ததாகவும் இன்னும் இந்த தொடர் துவங்குவதற்கு 11 நாட்கள் இடைவெளியுள்ள வேளையில் நிச்சயம் அதற்குள் ரிஷப் பண்ட் தயாராகிவிடுவார் என்றும் கூறப்படுகிறது. எனவே ரிஷப் பண்டின் காயம் குறித்து பெரிதாக யோசிக்க தேவையில்லை என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : இன்னும் 11 ரன்கள் போதும்.. கில்க்றிஸ்டின் சாதனையை தகர்க்க காத்திருக்கும் ரிஷப் பண்ட் – தோனியை மிஞ்சவும் வாய்ப்பு

ஆனாலும் ஒருவேளை காயம் தீவிரமடைந்து அவரால் இந்த தொடரில் பங்கேற்க முடியாமல் போனால் நிச்சயம் அது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடவை ஏற்படுத்தும் என்றும் கூறலாம். ஏனெனில் இங்கிலாந்து மண்ணில் இதுவரை இரண்டு சதங்களை பதிவு செய்துள்ள ரிஷப் பண்ட் 500 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -