- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இன்னும் 2 சிக்ஸர் போதும்.. சர்வதேச டி20 போட்டிகளில் 5 ஆவது இந்திய வீரராக அபிஷேக் சர்மா – நிகழ்த்தவுள்ள சாதனை

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது டி20 போட்டியானது ஜூன் 28-ஆம் தேதியான இன்று பெல்பாஸ்ட் நகரில் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே முதலாவது போட்டியில் தோல்வியை சந்தித்திருந்த இந்திய அணி இந்த இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் தயாராகி வருகிறது.

அபிஷேக் சர்மா நிகழ்த்த காத்திருக்கும் சாதனை :

இந்நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரராக களமிறங்க இருக்கும் அபிஷேக் சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறார். அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் அபிஷேக் சர்மா நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : இந்திய அணிக்காக இதுவரை 47 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2 சதம் மற்றும் 11 அரைசதம் என 1488 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஒட்டுமொத்தமாக அவர் 98 சிக்ஸர்களை குவித்திருக்கிறார்.

இதனால் இன்றைய போட்டியில் அவர் மேலும் இரண்டு சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில் சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக 100 சிக்சர்களை பூர்த்தி செய்த ஐந்தாவது வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார். இவருக்கு முன்னதாக ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

- Advertisement -

இதையும் படிங்க : இன்று வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமாக வாய்ப்பு.. அவருக்கு பதிலாக வெளியேறப்போவது யார் தெரியுமா?

அவர்களுக்கு அடுத்து 100 சிக்ஸர்களை பூர்த்தி செய்யப்போகும் வீரராக அபிஷேக் சர்மா ஐந்தாவது வீரராக இணையவுள்ளார். அதேபோன்று அதிவேகமாக 100 சிக்ஸர்களை பூர்த்தி செய்த இந்திய வீரராகவும் அவர் சாதனை நிகழ்த்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -