இன்னும் 11 ரன்கள் போதும்.. கில்க்றிஸ்டின் சாதனையை தகர்க்க காத்திருக்கும் ரிஷப் பண்ட் – தோனியை மிஞ்சவும் வாய்ப்பு

Pant and Gilchrist
- Advertisement -

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரிஷப் பண்ட் எதிர்வரும் 5 போட்டிகள் கொண்ட இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முன்னாள் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கில்க்ரிஸ்டின் சாதனையை தகர்க்க இருப்பதோடு மட்டுமின்றி முன்னாள் இந்திய கேப்டன் தோனியையும் மிஞ்சி முதலிடத்திற்கு செல்லவும் ஒரு அற்புதமான வாய்ப்பு காத்திருக்கிறது. அதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம். அந்த வகையில் இதுவரை இங்கிலாந்து மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களை குவித்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தோனி முதலிடத்தில் இருக்கிறார்.

ஆடம் கில்க்றிஸ்ட்டை முந்த காத்திருக்கும் ரிஷப் பண்ட் :

இங்கிலாந்து மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 12 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் எட்டு அரைசதங்களுடன் 37 ரன்கள் சராசரியுடனும் 778 ரன்கள் குவித்துள்ளார். அவருக்கு அடுத்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான ரோட்னி மார்ஷ் 21 போட்டிகளில் விளையாடி ஆறு அரை சதங்களுடன், 24 ரன்கள் சராசரியுடனும் 773 ரன்கள் குவித்து இரண்டாவது இடத்தில் உள்ளார்.

- Advertisement -

அவருக்கு அடுத்து தென்னாப்பிரிக்க முன்னாள் விக்கெட் கீப்பரான ஜான் வைட் 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6 அரை சதங்களுடன், 29 ரன்கள் சராசரியுடனும் 684 ரன்கள் குவித்துள்ளார். அதற்கடுத்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான இயான் ஹீலி 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1 சதம் மற்றும் 3 அரைசதம் என 684 ரன்கள் குவித்துள்ளார்.

அவருக்கு அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரான ஜெப் டிஜோன் 15 போட்டிகளில் விளையாடி 1 சதம் மற்றும் 2 அரைசதங்களுடன் 604 ரன்களை குவித்துள்ளார். அதற்கடுத்து ஆறாவது இடத்தில் இந்திய அணியின் முன்னாள் வீரரான பருப் இன்ஜினியர் 9 போட்டிகளில் விளையாடி 4 அரைசதங்களுடன் 563 ரன்கள் குவித்துள்ளார்.

- Advertisement -

அவருக்கு அடுத்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான கில்கிரிஸ்ட் 10 போட்டிகளில் விளையாடி 1 சதம் மற்றும் 2 அரைசதம் என 521 ரன்களுடன் ஏழாவது இடத்தில் உள்ளார். அதற்கடுத்து பிராட் ஹடின் பத்து போட்டிகளில் விளையாடி 1 சதம் மற்றும் 3 அரைசதங்களுடன் 513 ரன்களை குவித்து எட்டாவது இடத்தில் உள்ளார்.

அவருக்கு அடுத்த தற்போது ஒன்பதாவது இடத்தில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் இருக்கிறார். இதுவரை இங்கிலாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்து மண்ணில் 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் இரண்டு சதம் மற்றும் சில அரைசதங்களுடன் 511 ரன்கள் குவித்துள்ளார்.

இதையும் படிங்க : சி.எஸ்.கே அணிக்கு வருகிறாரா சஞ்சு சாம்சன்? அவரே வெளியிட்ட பதிவு – விவரம் இதோ

இந்நிலையில் எதிர்வரும் இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்று ரன்கள் அடித்தால் பிராட் ஹடினையும், 11 ரன்கள் அடித்தால் கில்கிரிஸ்டையும் ரிஷப் பண்ட் மிஞ்சுவார். அதேவேளையில் எதிர்வரும் இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 268 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் தோனியை மிஞ்சவும் அவருக்கு வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement