ஆஸ்திரேலிய வீரரிடம் களத்தில் வார்த்தை மோதலில் ஈடுபட்ட ரிஷப் பண்ட் – வைரலாகும் வீடியோ

- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி தற்போது மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. பாக்சிங் டே போட்டியாக நடைபெறும் இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 195 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 326 ரன்கள் எடுத்தது. இந்திய அணியை விட 131 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. இந்த இரண்டாவது இன்னிங்சிலும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க இந்திய அணி வலுவான நிலையில் இருந்தது.

Rahane-3

- Advertisement -

இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலிய பயணித்தபோது ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெயின் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் களத்தில் வார்த்தை மோதலில் ஈடுபட்டு கொண்டது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும் அப்போது அது குறித்து செய்திகள் இணையத்தில் வைரல் ஆனது. அதேபோன்று எந்த வருடத்திலும் தற்போது இந்த போட்டியில் வார்த்தை முதல் நடைபெற்றது

ஆனால் இம்முறை பெயினுக்கு எதிராக அல்ல மாறாக மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மேத்யூ வேட்டுக்கு எதிராக ரிஷப் பண்ட் இந்த வார்த்தை மோதலில் ஈடுபட்டுள்ளார். அடுத்தடுத்து தொடர்ச்சியாக விக்கெட்டுகள் விழ துவக்க வீரராக களமிறங்கி அசராமல் விளையாடிக் கொண்டிருந்தார். மேலும் தொடர்ச்சியாக பல பந்துகளை டாட் பாலாக விளையாடி அவர் செட்டாகி இருந்தார்.

pant 1

இந்நிலையில் இந்திய அணியில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஸ்டம்பிற்கு பின்னால் நின்று வம்பு இழுத்துக் கொண்டிருந்தார். குறிப்பாக பும்ரா வீசிய ஓவரில் ஒரு பந்தில் அவர் இந்த பந்தில் நீங்கள் அவுட் ஆகியிருக்க வேண்டும் என்ற தோனியில் “ஹி ஹி ஹி” என நக்கல் செய்து சில வார்த்தைகளையும் உதிர்த்தார். அதற்கு பதிலளித்த வேட் மீண்டும் அதே போன்று ” ஹி ஹி ஹி ” சிரித்து நீங்களே உங்களை பெரிய திரையில் பார்த்தீர்களா என சொல்லியிருந்தார்.

இந்த நிகழ்வு மொத்தமும் ஸ்டம்ப் கேமராவில் பதிவாகி இருந்தது. மேலும் வர்ணனையாளர்கள் அதனை வர்ணனை செய்தது குறிப்பிடத்தக்கது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி இறுதியில் மேத்யூ வேட் 137 பந்துகளை சந்தித்து 40 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை எடுத்திருந்தது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement