- Advertisement -
இந்திய கிரிக்கெட்

1000 ரன்ஸ் 90 சிக்ஸ்.. சேவாக் வாழ்நாள் சாதனை சமன் செய்த ரிஷப் பண்ட்.. இங்கிலாந்தில் புதிய உலக சாதனை

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அத்தொடரில் நான்காவது போட்டி மான்செஸ்டர் நகரில் ஜூலை 23ஆம் தேதி துவங்கிய நடைபெற்று வருகிறது. அதில் முதலில் விளையாடிய இந்தியா போராடி 358 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61, ரிஷப் பண்ட் 54, ஜெய்ஸ்வால் 58 ரன்கள் எடுத்தார்கள்.

இங்கிலாந்துக்கு கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்து விளையாடும் இங்கிலாந்து 2வது நாள் முடிவில் 225/2 ரன்களை அடித்து அதிரடியாக விளையாடி இந்தியாவை அச்சுறுத்தி வருகிறது. பென் டக்கெட் 94, ஜாக் கிராவ்லி 84 ரன்களில் அவுட்டான அந்த அணிக்கு களத்தில் ஜோ ரூட் 11*, ஓலி போப் 20* ரன்களுடன் விளையாடி வருகிறார்கள்.

- Advertisement -

காயத்துடன் உலக சாதனை:

முன்னதாக இந்தப் போட்டியில் முதல் நாளில் பேட்டிங் செய்த இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிசப் பண்ட் பாதத்தில் மிகப்பெரிய காயத்தை சந்தித்தார். அதனால் நடக்க முடியாமல் தடுமாறிய அவர் வேதனையுடன் வண்டியில் ஏறி சென்றதால் மேற்கொண்டு விளையாட மாட்டார் என செய்திகள் வெளியாகின. ஆனால் நாட்டுக்காக காயத்தை பொருட்படுத்தாத அவர் முதலுதவிகளை மட்டும் எடுத்துக் கொண்டு ரசிகர்களின் பாராட்டுக்கு மத்தியில் களமிறங்கினார்.

அப்போதும் வலி இருந்த காரணத்தால் சிங்கிள் எடுக்க ஓடாத அவர் பவுண்டரிகளால் மட்டும் ரன்கள் எடுத்து மொத்தமாக 54 ரன்கள் குவித்து அவுட்டானார். இந்த 54 ரன்களையும் சேர்த்து இங்கிலாந்தில் மட்டும் ரிசப் பண்ட் 1035 ரன்களை 43.12 என்ற சராசரியில் அடித்துள்ளார். அதில் 5 அரை சதங்கள், 4 சதங்கள் அடங்கும்.

- Advertisement -

சேவாக் சாதனை சமன்:

இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு நாட்டில் 1000 ரன்கள் குவித்த முதல்வெளிநாட்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற உலக சாதனையை ரிசப் பண்ட் படைத்துள்ளார். இதற்கு முன் எந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும் ஒரு வெளிநாட்டில் 1000 டெஸ்ட் ரன்கள் அடித்ததில்லை. சொல்லப்போனால் ஆஸ்திரேலியாவில் ரிஷப் பண்ட் 879 ரன்கள் அடித்ததே 2வது அதிகபட்சமாகும்.

இதையும் படிங்க: ரிஷப் பண்ட் போராட்ட ரன்ஸை இப்படி வீணடிக்கலாமா? மோசமான கில், இந்திய பவுலர்களை விமர்சித்த நாசர் ஹுசைன்

மேலும் இப்போட்டியில் அடித்த 2 சிக்ஸரையும் சேர்த்து டெஸ்ட் போட்டிகளில் அவர் 90 சிக்ஸர்கள் அடித்துள்ளார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற வீரேந்திர சேவாக் வாழ்நாள் சாதனையும் அவர் சமன் செய்துள்ளார். சேவாக் 103 இன்னிங்சில் அடித்த 90 சிக்சர்களை ரிசப் பண்ட் வெறும் 82 இன்னிங்சில் அடித்து சமன் செய்துள்ளது வியப்பை ஏற்படுத்துகிறது.

- Advertisement -