நியூசிலாந்து அணிக்கெதிரான கடைசி 2 போட்டியில் ரிஷப் பண்ட் விளையாட வாய்ப்பில்லை – காரணம் இதுதான்

Rishabh-Pant
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அதன்பின்னர் அடுத்த ஒன்றரை ஆண்டுகள் எவ்வித போட்டிகளிலும் விளையாடாமல் இருந்த அவர் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது தான் கம்பேக் கொடுத்திருந்தார். அப்படி கம்பேக் கொடுத்த அந்த ஐபிஎல் தொடரில் அட்டகாசமான பார்மை அவர் நிரூபித்து இருந்தார்.

ரிஷப் பண்ட் அடுத்த 2 போட்டிகளில் விளையாடுவது சந்தேகம் :

இதன் காரணமாக மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்த அவர் டி20 உலக கோப்பையை வென்ற அணியிலும் இடம் பெற்றிருந்தார். அதோடு தொடர்ச்சியாக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வந்த அவர் வங்கதேச அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்தார்.

- Advertisement -

அப்படி கம்பேக் கொடுத்த அந்த தொடரிலேயே சதம் அடித்து அசத்திய ரிஷப் பண்ட் தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறார். இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக தற்போது பெங்களூரு மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் போது பயிற்சி செய்கையில் அவர் காயமடைந்துள்ளார்.

தான் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அதே காலில் பந்து பட்டு வலியால் துடித்த ரிஷப் பண்ட் போட்டியின் மூன்றாம் நாள் அன்று விக்கெட் கீப்பிங் செய்ய வரவில்லை. அவருக்கு பதிலாக துருவ் ஜுரேல் விக்கெட் கீப்பிங் செய்தார். இதன் காரணமாக இரண்டாவது இன்னிங்ஸில் அவர் பேட்டிங் செய்வாரா? என்ற சந்தேகம் எழுந்தது.

- Advertisement -

ஆனாலும் தற்போது வலியுடன் இந்திய அணிக்காக இரண்டாவது இன்னிங்சில் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்து வருகிறார். இந்நிலையில் அவர் நியூசிலாந்து அணிக்கு எதிரான இஞ்சியுள்ள கடைசி இரண்டு போட்டியில் விளையாட வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது. ஏனெனில் இந்த நியூசிலாந்து தொடருக்கு அடுத்ததாக இந்திய அணி ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்ற இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.

இதையும் படிங்க : ஷிகர் தாவனுக்கு அடுத்து நியூசிலாந்து அணிக்கெதிராக விசித்திரமான சாதனையை நிகழ்த்திய – சர்பராஸ் கான்

ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறும் அந்த தொடருக்கு ரிஷப் பண்ட் அவசியம் தேவை என்பதால் முன்னெச்சரிக்கை காரணமாக அடுத்த இரண்டு போட்டிகளில் ரிஷப் பண்ட்டுக்கு ஓய்வு கொடுக்க வாய்ப்பு உள்ளது. அவருக்கு பதிலாக அண்மையில் வாய்ப்பை பெற்று சிறப்பாக செயல்பட்டு வரும் துருவ் ஜுரேல் அடுத்த 2 போட்டிகளில் விளையாடுவார் என்றும் தெரிகிறது. இருப்பினும் நிர்வாகம் இதுகுறித்து என்ன முடிவெடுக்கப்போகிறது என்பது குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

Advertisement