டிராவிட் மாதிரி இல்லாம.. கெளதம் கம்பீர் அதுல ஒருதலைபட்சமாக இருக்காரு.. ரிஷப் பண்ட் பேட்டி

Rishabh Pant
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார். 2007 மற்றும் 2011 உலகக் கோப்பைகளை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் ஐபிஎல் தொடரிலும் கேப்டனாக 2 கோப்பைகளை வென்ற அனுபவத்தைக் கொண்டுள்ளார். அத்துடன் 2024 சீசனில் ஆலோசகராக செயல்பட்ட அவர் 10 வருடங்கள் கழித்து கொல்கத்தா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினர்.

அதன் காரணமாக ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் ஓய்வு பெற்ற ராகுல் டிராவிடுக்கு பின் கௌதம் கம்பீர் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார். அவருடைய தலைமையில் இலங்கை டி20 தொடரில் வென்ற இந்தியா ஒருநாள் தொடரில் 27 வருடங்கள் கழித்து தோற்றது. அதனால் முதல் சுற்றுப்பயணத்திலேயே கம்பீர் சில கடுமையான விமர்சனங்களையும் சந்தித்தார்.

- Advertisement -

பயிற்சியாளர்களின் வித்யாசங்கள்:

இந்நிலையில் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வெற்றி தோல்விகளைப் பற்றி பார்க்காமல் எப்போதும் சமநிலையுடன் இருப்பார் என்று ரிஷப் பண்ட் கூறியுள்ளார். ஆனால் கௌதம் கம்பீர் கண்டிப்பாக வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்துடன் வீரர்களிடம் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்வார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அந்த 2 பயிற்சியாளர்களின் வித்தியாசம் பற்றி ரிஷப் பண்ட் பேசியது பின்வருமாறு.

“ஒரே மனிதராகவும் பயிற்சியாளராகவும் ராகுல் பாய் மிகவும் சம்நிலையானவர் என்று நான் கருதுகிறேன். அதில் நல்லதும் கெட்டதும் இருக்கலாம். அதில் தனி நபர்கள் எந்த விஷயத்தில் கவனம் செலுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்து நன்மைகளும் தீமைகளும் இருக்கும். மறுபுறம் கௌதம் பாய் மிகவும் ஆக்ரோஷமானவர்”

- Advertisement -

அதிரடியான கம்பீர்

“உண்மையில் அவர் நீங்கள் வெல்ல வேண்டும் என்ற ஒரு தலைப்பட்சமான கோட்பாட்டை கொண்டவர். இருப்பினும் நீங்கள் எப்போதும் சரியான சமநிலையை பின்பற்றி முன்னேறுவதற்கான வழியை கண்டறிய வேண்டும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து அடுத்ததாக வங்கதேசம் மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா தங்களது சொந்த மண்ணில் டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது.

இதையும் படிங்க: 91 ரன்ஸ்.. ருதுராஜிடம் அத்து மீறிய கொண்டாட்டம்.. தடை பெற்றும் திருந்தாத இளம் வீரர்.. பிசிசிஐ கவனிக்குமா?

அதன் பின் ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. கடைசியாக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற 2018 – 19, 2020 – 21 ஆகிய 2 தொடர்களையும் இந்தியா வென்றது. எனவே இம்முறை ஆஸ்திரேலிய மண்ணில் கௌதம் கம்பீர் இந்தியா ஹாட்ரிக் வெற்றியைப் பெற உதவுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

Advertisement