தோனி தான் எனக்கு எல்லாமே.! அவரை பார்த்தால் குஷியாகி விடுவேன்.! ரிஷப் பண்ட்

Dhoni
Advertisement

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் தொடரை தொடர்ந்து இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்திய அணியில் இந்த தொடரில் இந்திய துவக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மாவிற்கு பதிலாக இளம் வீரர் ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டுள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ரிஷப் பண்ட் இந்திய முன்னாள் கேப்டன் தோனியிடம் பெற்ற ஆலோசனைகளை குறித்து தெரிவித்துள்ளார்.

rishabh-pant

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் விளையாடிய ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி 684 ரன்களை எடுத்தார். மேலும், இவரது பேட்டிங் சராசரி 173.60 ஆக இருந்தது. ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடிய இவர் சமீபத்தில் நடைபெற்ற இயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் கூட இடம்பெறவில்லை .இதனால் சிறப்பான ஒரு வீரருக்கு அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது விவாதத்திற்கு உள்ளானது.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் இந்திய ஏ அணி -இங்கிலாந்து- லயன்ஸ் – வெஸ்ட் இண்டீஸ் மோதும் முத்தரப்பு ஒரு நாள் போட்டிகள் நடைபெற்று வந்தது . இந்த தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது வந்த தொடரிலும் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இதனால் தற்போது இவருக்கு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம் கிடைத்துள்ளது.

Rishab Pant

சமீபத்தில் பிசிசிஐ தொலைக்காட்ச்சியில் பேட்டியளித்த ரிஷப் பண்ட் “தோனி எனக்கு அண்ணன் போன்றவர். அவரிடம் நான் பல் ஆலோசனைகளை கேட்டுள்ளேன். ஐபிஎல் தொடரில் கூட அவரிடம் பல ஆலோசனைகளை கேட்டுள்ளேன். அவர் எனக்கு விக்கெட் கீப்பிங்கில் பல்வேறு டிப்ஸ்களை வழங்கியுள்ளார். அவர் கூறிய யோசனைகள் எனக்கு இப்போது வரை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement